பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்மாட்டியல்-நூற்பா ) 會導

“நின்மகன், படையழித்து மாறின. னென்றுபலர் கூற,

மண்டமர்க் குடைந்தன னாயின் உண்டவென் முலையறுத் திடுவென் யானெனச் சினை இ" (புறம் 278) என்பது குடிகோள்பற்றி வந்தவெகுளி; என்னை; தன்மகன் மறக்குடிக்குக் கேடுசூழ்ந்தானென்று சினங்கொண்டாளாகலின்,

'நெருந லெல்லைநீ யெறிந்தோன் தம்பி யகற்பெய் குன்றியிற் சுழலுங் கண்ணன்’ (புறம்.300)

என்பதும் அது."

“வரிவயம் பொருத வயக்களிறு போல

இன்னும் மாறாது சினனே' (புறம், 100) என்பதனுள், அலைபற்றிச் சினம்பிறந்தது: என்னை? புலியான் அலைக்கப்பட்ட யானை பொருது போந்தும் அவ்வலைப் புண்டலை நினைந்து சினங்கொள்ளாநின்ற தென்றமையின்,

'உறுதுப்பு அஞ்சாது உடல்சினஞ் செருக்கிச்

சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை (புறம், 72) என்பது கொலை பொருளாக வெகுளிச்சுவை பிறந்தது; என்னை? சிறுசொற் சொல்லுதலென்பது புகழ்கொன்றுரைத்த லாகலின். "செய்தவறு இல்வழி யாங்குச் சினவுவாய்” (கலி.87) என்பது ஊடற்கண் தலைமகள் வெகுட்சி கூறியது. பிறவு மன்ன.

இன்னும் அவ்விலேசானே,

'நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை' (புறம் 125) என்றாற்போலச் சினமில்லதனை உள்ளது போலக் கூறுவனவுங் கொள்ளாமோவெனின், உணர்வுடையனவற்றுக் கல்லது சுவை தோன்றாமையின் வெகுளியென்று ஈண்டுக் கூறப்படா வென்பது* இது பிறன்கண் தோன்றிய பொருள்பற்றிவரும்." (so)

3. குடிகோள் பற்றி வந்த வெகுளி. 4. உணர்வுடைய உயிர் கட்குச் சுவை தோன்றுவதல்லது உணர்வற்ற கெருப்பு முதலிய சடப்பொருட்குச் சுவையுணர்வு தோன்றாமையின் வெதுப்பின் வக்த வெகுளி என்ற அச்சொற்குறிப்பினாலே, கெருப்புச் சினந்தணிந்த என்றாற்போலச் சினமில்லாததனைச் சினமுள்ளதுபோலக் கூறுவனவற்றை இங்குக் கொள்ள வேண்டிய இன்றியமையாமையில்லை என்பதாம்,

5. வெகுளி என்னும் இம்மெய்ப்பாடு பிறர் கண்தோன்றிய பொருள்பற்றினதும்,