உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

呜呜。 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

அதுவும் மேற்கூறப்படி டன போலாமையான் வேறோர் மெய்ப்பாடாக ஒதப்பட்டது.

'வாழியாதன் வாழி' (ஐங்குறு. க) என்றும், "எங்கோ வாழிய குடுமி" (புறம். க) என்றும் இவ்வாறு வருவழி ஆண்டு வரும் மனநிகழ்ச்சி மெய்ப்பாடாம். அஃதேல் வைதலும் மெய்ப்பாடாதல் வேண்டும் எனின் அது வெகுட்சியின் முதிர்வு. இது அன்பின் முதிர்வாகாதோ எனின், அன்பின்றியும் அரசன் முதலாவினாரைச் சான்றோர் வாழ்த்துதலின் அடங்க தென்க.

தாணல் என்பது-தமக்குப் பழி வருவன செய்யாமை

'பிறர்பழியுந் தம்பழியும் நானுவார் நானுக்

குறைபதி என்னு முலகு' (குறள். ச0க)ே

"தானால் உயிரைத் துறப்பார் உயிர்ப்பொருட்டால்

தாண்துறவார் நாண் ஆள் பவர்' (குறள். க0கள்)

இ; லகும்.

துஞ்சல் என்பது-உறக்கம். உறங்காமை போலாமையின் மெய்ப்பாடாயிற்று.

'......... ... முனிவின்றி

நனந்தலை யுலகமுந் துஞ்சும்" (குறுந். சு)

கான வரும்,

அரத்து என்பது- உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு.

அதுவும் ஏனைச்சொல்லின் வேறுபடுதலின் அரற்றென ஒரு மெய்ப்பாடாயிற்று. முன் உறக்கம் வைத்தலானும் பின் கனவு வைத்தலானும் இப்பொருள் உரைக்கப்பட்டது.

'பாயல்கொண் டென்தோட் கனவுவா ராய்கோல் தொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ

விடுமருப். யானை விலங்குதேர்க் கோடும் நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்று செய்பொருள் முற்று மளவு' { கலித் உச)