பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 . தொல்காப்பிய ஆராய்ச்சி சொல்லாக இருந்தாலும் தனி ஒரு சொல்லால் உள் ளக் கருத்தை விளக்கமாக அறிவித்தல் இயலாது. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து நின்றே கருத்தை விளக்குகின்றன. 'முருகன் தமிழ் மொழி யைக் கற்றான்' என்ற சொற்றொடரில் மூன்று முழுச் சொற்கள் இருக்கின்றன: முருகன், தமிழ் மொழி, கற்றான் என்பன. முருகன் கற்றான் என்று சொல்லப்படுகின்றபோது முருகன்என்பது எழுவாய். கற்றான் என்பது பயனிலை. முருகன்' உயர்திணை ஆண்பால் என்பதற்கு ஏற்பக் கற்றான் என்பது பயனிலையாம். கற்றான் என்றசொல்லிலும் உயர்திணை ஆண்பால் உணர்த்தும் கூறு இருத்தல் வேண்டும். அதனை அறிவிப்பது ஆன் என்ற கூறாகும். தமிழ் மொழியை என்பது செயப்படு பொருளாக வந்துள் ளது. அதனை அறிவிப்பது 'ஐ' என்பதாகும். இலக்கண நூலார் வேற்றுமை உருபு என்பர். 'கற்றான்' என்பது இறந்தகால வினை. கல்+த்+ஆன் என்று பிரித்தால் 'த்' இறந்தகாலத்தை உணர்த்தும் இடை நிலையாகும். சொற்றொடர்களால் உள்ளக் கருத்தை அறிவிக்கத் தொடங்கும்போது பகுதிகளும் பல கூறுகளும் வேண்டப்படுகின்றன. பகுதியை . உரிச் சொல் என்றார் ஆசிரியர் தொல்காப்பியர். பிற கூறுகளை இடைச் சொல் என்று குறிப்பிடுகின்றார். 'இடைச் சொல் என்றால் பெயரிடையேயும் வினை இடையேயும் சொற்றொடர் இடையேயும் பொருந்தி நின்று பொருள் விளக்கத்திற்கு துணை புரிவது என்று பொருளாகும். 14 அவைதாம்: 'இடையெனப் படுவ பெயரொடும் வினையொடும் நடைபெற் றியலும் : தமக்கியல்பு இலவே."