பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 'புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதவுநவும் வினைசெயல் மருங்கின் காலமொடு வருநவும் வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும் அசைநிலைக் கிளவி ஆகி வருநவும் இசைநிறைக் கிளவி ஆகி வருநவும் தத்தம் குறிப்பில் பொருள்செய் குநவும் ஒப்பில் வழியால் பொருள் செய் குநவும் என்று அப்பண் பினவே நுவலுங் காலை. அவைதாம்: CE 'முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும் தம்மீறு திரிதலும் பிறிதுஅவண் நிலையலும் அன்னவை யெல்லாம் உரிய என்ப, ” 113 இடைச் சொற்கள் யாவை? அவை எவ்வாறு சொற் றொடரில் நின்று கருத்தை விளக்கப் பயன்படுகின் றன என்பனவற்றைத் தெளிவுறக் கூறுகின்றார் ஆசிரியர். மேலை நாட்டு மொழி நூலறிஞர்கள், Semantemes and morphemes' என்னும் தலைப்பில் ஆராய்கின்றனவற்றை ஆசிரியர் தொல்காப்பியனார் உரிச்சொல் இடைச் சொல் என்ற தலைப்புகளில் ஆராய்கின்றார். சொல் உருவாகுங்கால் பகுதி, இடை நிலை, விகுதி ஆய இவையன்றிப் பிறவும் வேண்டப் படுகின்றன. அவற்றைச் சாரியை என்றும் சந்தி என்றும் அழைப்பர் இலக்கண நூலார். தொல் காப்பியர் " புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக் குதவுந" என்றார். இந் நூற்பாவில் சிறப்பாக எடுத் துச் சொல்லப்பட்டுள்ள கால இடை நிலை. வேற்றுமை விளக்கும் உருபுகள், அசை நிலை, இசை நிறைக்கும் கூறுகள், குறிப்பால் பொருளுணர்த்து வன, உவமை உருபுகள் ஆகியவை ஒழிந்த பிறவற் றைப் புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக் குதவுந" என்றும் சுட்டியுள்ளார். 8-1454