பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தொல்காப்பிய ஆராய்ச்சி சாரியைபற்றி (புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்குதவுவன) உருபியலிலும் (எழுத்ததிகாரம்), வினை செயல் மருங்கின் காலமொடு வருவனபற்றி வினையியலிலும், வேற்றுமைப் பொருள்வயின் உருபு ஆகுந பற்றி, வேற்றுமையியல், வேற்றுமை மயங் கியல், விளிமரபு முதலிய இயல்களிலும் உவம் உரு புகள் (ஒப்பில் வழியான் பொருள் செய்குந) பற்றி உவம இயலிலும் (பொருளதிகாரம்) விளக்குகின்றார். எஞ்சியனவாம் அசை நிலைக்கிளவி இசை நிறைக் கிளவி, தத்தம் குறிப்பால் பொருள் செய்குந ஆகிய மூன்று பற்றி இடையியலில் ஆராய்கின்றார். இவ்வாறு தமிழுக்கே உரிய இடைச்சொல் உரிச் சொற்களை ஆராய்கின்ற முறைமை வடமொழி நூலாராம் யாசுகருடைய நிருத்தத்தில் காணப்படு கின்றதாம். ஆகவே யாசுகரைப் பின்பற்றித் தொல் காப்பியர் கூறியிருப்பர் என அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியார் கருதுகிறார். (History of grammatical theories in Tamil: Pages 198, 301) யாசுகருடைய காலம் தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டமையின், அவ் வாறு கருதுதல் பொருந்தாது. யாசுகர் தொல்காப்பி யரைப் பின்பற்றி நூல் செய்திருத்தல் கூடும் என்று கூறினால் மிக மிகப் பொருந்துவதாகும். ஆனால் சாத் திரியார் அவர்கள் வடமொழிப் பற்றின் காரணமாக இவ்வுண்மையை உணர்ந்திலர் போலும், வடமொழி யாளர் பிறரால் பின்பற்றப்பட வேண்டியவர்களே யன்றிப் பிறரைப் பின்பற்ற மாட்டார்கள் என்ற துணிபு பல நூல்களையும் கற்றறிந்த சாத்திரியாரை யும் விட்டிலை போலும், சாத்திரியார் நினைப்பது போல் ஆசிரியர் தொல்காப்பியர் அவ்வாறு வட மொழிப் பிராதி சாக்கியங்களையும், யாசுகருடைய நிருத்தத்தையும் பாணினியினுடைய இலக்கணத்தை