பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 115 யும் பின்பற்றித்'தம் நூலை அமைத்திருப்பின் வெளிப் படையாகக் குறிப்பிட்டுக் கூறியிருப்பர். அவ்வாறு கூறாததனால் சாத்திரியார் கருத்து ஆய்வு முறைக்குப் பொருத்தமற்றது என அறிதலே ஏற்புடைத்து, இந்திய மொழிகளின் தாயாம் தமிழ், ஆரியத்திற்கும் தாயாம் என்ற உண்மை அறியப்படும் காலம் சேய் மையில் இன்று, சதுர்மறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின் முதுமொழி நீ அனாதியென மொழிகுவதும் வியப்பாமே' என்ற பேராசிரியர் சுந்தரனார் கூற்றை உன்னுக. எச்ச இயல்: கிளவியாக்கம் முதல் உரியியல் ஈறாக எட்டு இயல்களிலும் விளக்கப்பட்டன போக, மொழி யைப்பற்றி இன்னும் விளக்கவேண்டியனவாய் எஞ்சி நிற்பனபற்றி இவ்வியலில் ஆராய்வதால் இவ்வியல் எச்சவியல் என்னும் பெயருக் குரியதாயிற்று. மொழி நூலறிஞர்கள் மொழியைப்பற்றி ஆராய்ந்து கூறும் நூலில், மொழி வகை, மொழிக்குரிய சொல்வளம் முதலியன பற்றிய விளக்கமும் இடம் பெற்றிருக் கக் காணலாம். மொழி வகைகளை என்னுங்கால், நூல் மொழி (Titerary dialect), கிளை மொழி (dialect), இனமொழி (Cognate Language ), வேற்று மொழி (Foreign language) எனப் பல வகைப்படும். உரையும் பாட்டுமாய் அமைந்து கருத்து விளக்கும் கருவியாய் அமைந்துள்ள மொழிழிபல் வகையாலும் சொல் வளம் பெறுகின்றது. ஒன்றாய்த் தோன்றிய மொழியே காலப் போக்கில் உரை மொழி (Speech dialect) என்றும், நூல்மொழி என்றும், கிளைமொழி என்றும், இனமொழி என்றும் திரிபுபட்டுப் பிரிவுபட்டு விடு கின்றது. இவைபற்றி யறிந்தாலன்றி மொழியறிவு