பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 131 மணம் செய்ய எண்ணிலரே" என வருந்திப் பலவாறு கூறவும், அக்கூற்றுக்கு மாற்றாகக் காதலிக்கப் படுவோளிடமிருந்தோ, அவள் சுற்றத்தாரிட மிருந்தோ எவ்வுரையும் பெறாமல் தானே நினைந்து நினைந்து சொல்லி 'அச்சொல்லுதலிலே இன்பம் காணுவான். காதல் எண்ணம் அவனிடம் இருக் கின்றது; அவளிடம் இல்லை. ஆகவே ஒரு மருங்கு பற்றிய காதல் ஆயிற்று. காதல் வயது அடைந்துள்ள பெண்களைக் கண்டு விரும்பி அவள் காதலிக்காமல் ஆடவன் மட்டும் காதலித்தாலும் கைக்கிளை தான். பெண் காதலித்து ஆண் காதலிக்காமல் இருந்தாலும் கைக்கிளைதான். ஆனால் இவ்விரண்டு பற்றியும் ஆசிரியர் கூறினாரிலர். முதலில் காதல் எண்ணம் தோன்றாது போயினும் பின்னர்க் காதல் நிலையை அடைவர். கைக்கிளைத் தன்மை நிலைத்து நில்லாது. காதலியல்பு நிரம்பப் பெறாத இளையோளாய் இருப்பின் அவன் என்ன கூறினும் உள்ளம் இரங்காள் அன்றோ? ஆகவே கைக்கிளைக்குரியவள் காதல் சாலா இளையோள் என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். பெருந்திணை என்பது பொருந்தாத காதல். அது நான்கு வகைப்படும். காதலியைத் தான் விரும்பியவாறு அடையப் பெறாமல் மடலேறி அடைய முயலுதல், மணப் பருவத்திற்குரிய இளமை கழிந்த பின்னர் மணக்க விரும்புதல், தெளிவிக்க முடியாதவாறு அடைய முடியாத காதல் வயப்பட்டு வருந்துதல், காதல் மிகுந்து வலிமையால் கட்டாயப் படுத்திக் கூடுதல் என்பனவே அவை நான்கும். இவை ஓரோருகால் ஒரோரிடங்களில் காணப்படும் நிகழ்ச்சிகளே. ஆகவே இலக்கியங்களிலும் வை பயிலும்.