பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தொல்காப்பிய ஆராய்ச்சி செந்நீர் வடியும். இந் நிலையைக் காணும் அந்நாட்டுச் சான்றோர் பெண்ணின் பெற்றோரை நெருங்கி அவனுக்கு அப்பெண்ணை மணமுடித்துக் கொடுக்கு மாறு வேண்டுவர். பெற்றோரும் அவன்பால் இரங்கி இசைவு தெரிவிப்பர். மணம் நிகழும். இல்லையேல் உயிரை விட்டுவிடுவான். பெண் ணு ம் அடைவதற்கு ஆகவே, விரும்பிய பெண்ணை ஆடவன் மேற்கொள்ளுவதாகக் கூறும் இம்முறை மகளிர்க்கு விலக்கப்பட்டுள்ளது. மகளிர் தாம் விரும்பிய ஆடவனை அடைய இம் மடலேறும் முறையை விரும்புவதாகக் கூறல் கூடாது. பெண் மடலேற விரும்புவதாக இலக்கியம் இயற்றுதல் கூடாது. அவ்வாறு இயற்றின் நாணமே நல்லணி யாகக் கொண்ட நங்கையர்க்கு இழுக்குக் கற்பிக்கப் பட்டதாகும். ஆகவே, எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல் பொற்புடை நெறிமை இன்மை யான என்றார் தொல்காப்பியர். " எத்திணை மருங்கினும் அகத்திணை ஏழனுள் எந்தத்திணையிடத் தும், மகடூஉ = மகள், மடன் மே(வ)ல் மடலேற விரும்புதல், பொற் சிறப்புடைய, நெறிமை புடைய இல்லை. = = முறைமை. இன்மையான = ஆடவர் மடலேறலே பொருந்தாக் காதலாம் பெருந்திணை எனக் கூறப்பட்டது. மகளிர்க்கு இது முற்றிலும் பொருந்தாது பட்டுள்ளது. என வரையறுக்கப் "கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் என்பது தமிழ்மறை.