பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 149 வடமொழியில் மகளிர் மடலேறுவதாகக் கூறும் மரபு உண்டு என்பது திருமங்கையாழ்வார் பெரிய திருமடலால் தெளியலாம். வருமாறு: " அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டறிவதுண்டு அதனை யாம் தெளியோம் மன்னும் வடநெறியே வேண்டினோம்" இலக்கியத்திலும் நங்கையர் நாணிகவா நல்லற நெறியினராகவே கூறப்பட வேண்டியவர் என்பதே ஆசிரியர் தொல்காப்பியர் கொள்கையாம். இவ்வியலில் அகப்பொருள் கூறுவதற்குரிய பாக்களையும், பாக்களில் கருத்தை விளக்குவதற்குத் துணையாயுள்ள உள்ளுறை உவமத்தினையும் இன்ன வென விளக்குகிறார் ஆசிரியர். கூறும் பொருளுக்கு ஏற்பப் பாக்கள் அமைதல் வேண்டும். அகத்திணைப் பொருளுக்குரிய பல்வேறு உணர்ச்சி நிலைகளைச் சொல் கருவியாக வெளிப்படுத்துவதற்குக் கலியும் கலியுறுப் புக்கள் பொருந்தி வரும் பரிபாடலும் ஏற்றனவாம். இவை இரண்டும் செவ்விய ஓசை வளனும் நடைச் சிறப்பும் பொருந்தியன. இலக்கியம் உலகியலைத் தழுவியும் உலகியலோடு ஒத்த கற்பனை முறையிலும் இயற்றப்படல் வேண்டும் எனவும் சுட்டுகின்றார். மேனாட்டார் இயற்கையைத் தழுவி இயற்றலே இலக்கியம் என்பர். தொல்காப்பியரும் இயற்கையை யும் உலகியலையும் தழுவியே இலக்கியம் இயற்றப் படல் வேண்டுமென்று பன்முறையாலும் விளக் குகின்றார். இவ்வாறு இயற்றப்படுதலை புலன் நெறி வழக்கம்' என அழைத்துள்ளார். புலமை