பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241

மாந்த உடலில் உள்ளடங்கியுள்ள இந்த உயிர்தான் பிரம்மன் என்று அழைக்கப்படுகிறது. (அதர் 11)

முற்போக்கு எண்ணம் இல்லாதிருப்போரையும் விரித்த சிந்தனையில்லாதோரையும் நான் இங்கேயே விட்டுவிடுகிறேன். பரந்துயர்ந்த சிந்தனையுள்ளோர் முன்னேறிட நான் உதவுகிறேன். (இருக் 10)

அவன் ஆசையற்றவன், அமைதியானவன், இறப்பற்றவன், எவருடைய துணையுமின்றி தானே வாழ்பவன். பொருண்மைச் சாரத்தில் நிறைவு அடைபவன், எந்தக் குறைவுமில்லாதவன். இந்த அமைதியான, வயது ஏறாத என்றும் இளமையோடிருக்கிற தலை சிறந்த ஆன்மாவை எவனொருவன் நன்கறிகிறானே, அவன் எவருக்கும் அஞ்சாதவன், சாவிற்கும்கூட.

(அதர் 10)

துண்ணிய கூரறிவு மிகுந்த மனிதர்களே, - தாழ்வுற்ற புறக்கணிக்கப் பட்ட, தாழ்ந்த, கைவிடப்பட்ட மக்களை மறுபடியும் தூக்கி நிறுத்துங்கள். புகழ் பெற்ற மாந்தர்களே. தீவினை புரிந்தவர்களை உயர்த்திப் புது வாழ்வு தொடங்க அவர்களுக்கு உதவிடுங்கள்.

(இருக் 10)

த.கோ - தி.புதி