உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 O.

அழியும் உடல்

முடிவு வரையில் தீவினைகளுக்கு எதிராகப் போர் தொடுத்துக் கொண்டிரு. - மனித உடலில் நற்குணங்கள், தீய குணங்கள் இரண்டுமே காலங்காலமாக பிணைக்கப்பட்டுள்ளன. படைத்தவன் மனித உருவத்தைத் திட்டமிட்டபோதே, நற்குணங்களும், தீக் குணங்களும் அந்த அமைப்பில் புகுந்து அதைத் தங்கள் உறைவிடமாக

மெய்மை, அறிவு, நிறைவு, பெருந்தன்மை, நம்பிக்கை இவற்றின் கூடவே, தீக்குணம், வேட்கை, பசி, ஆகிய தன்மைகளும் அங்குக் குடி கொண்டுள்ளன. மகிழ்ச்சி, துயரம், பொறாமை, பற்றார்வம், இருட்டு, மகிழ்வளிக்கும் ஒளி இவை யாவும் மனித ஆத்மாவாகிய துணியில் இழைக்கப்பட்டுள்ளன. கூடவே வாழும் எதிர்மறை உணர்வுகளுமாகச் சேர்ந்து, இந்த நிலை முழுமை பெறுகிறது.

நற்றமிழில் நால் வேதம்