உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

288

அனைத்து வலிமையுள்ள இறைவன் அன்பர்களின் வேண்டுதல்களைத் தெய்வீகக் காற்றுகளுக்குத் தெரிவிக்கிறான். அவை நிலத்திற்குப் பணித்துளிகளை அனுப்புகின்றன.

(இருக் 5)

ஒ, கொண்டல்களே, மழை பொழிபவைகளே. விண்ணிலிருந்து மண்ணிற்கு நீங்கள் நீர்த் தாரைகளை அனுப்பிவீர்களாக. உலகை வாழச் செய்பவ்ர்களே, நல்ல மனிதர்களின் செல்வத்தை வளரச் செய்யுங்கள்.

(இருக் 6)

கார் முகில்களைத் தாங்கிச் செல்லும் காற்றுகளே, மழை பொழிபவர்களே, விண்ணிலிருந்து நீரைப் பொழிவீர்களாக, அடிப்படையான கொள்கை வைத்திருப்பவர்களே, புகழுரைகளைக் கேட்டு மகிழ்வடைபவர்களே. உலகத்தை வாழ வைப்பவர்களே, உங்களைப் பாராட்டுகிறவர்களின் செல்வத்தைப் பன் மடங்காகச் பெருகச் செய்வீர்களாக.

(இருக் 6)

நம்மை மேலெழச் செய்வதற்காக அன்புடன் முகில்கள் கீழிறங்கி வரட்டும். நமது இன்னல்களில், அவை பெரியவையோ, சிறியவையோ எப்படி இருந்தாலுமே, உதவி செய்யட்டும். (இருக் 6)

கொள்கைப் பிடிப்புள்ள உனது தேர், கெட்ட எண்ணமில்லாமலிருக்கட்டும். ஒட்டுபவன் இல்லாத, குதிரைகளில்லாத அவற்றிற்கு

நற்றமிழில் நால் வேதம்