பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரிட்ட ஆணவக் கருவரையில் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப்போல் கட்டுண் டிருந்தன்னை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கிசைந்த பேரிட்டு மெய்யென்று பேசுபாழ் பொய்யுடல் பெலக்கவினை அமுதம் ஊட்டிப் பெரிய புவனத்திடை போக்குவர உறுகின்ற பெரியவிளையாட் டிசைத்திட்டு ஏரிட்டதன் சுருதி மொழிதப்பின் நமனை விட்டு இடருற ஒறுக்கி, இடர்தீர்த்து இரவு பகல் இல்லாத பேரின்ப வீட்டினில் இசைந்து துயில் கொண்மின் என்று சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்கவரு தட்சிணா மூர்த்தியே சின்மயா னந்த குருவே -தாயுமானவர்