உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லவை ஆற்றுமின் மனிதன் பிற உயிர்களினும் வேறுபட்டவன். நல்லதையும் தீயதையும் பகுத்துணர வல்லவன்; உலகில்வாழும் உயிர்களை ஒத்து நோக்கும் திறன்பெற்றவன்; அவன் உள்ளம் உயர்ந்தது; அதனால் உயர்ந்ததையே எண்ணக் கடமைப் பட்டவன்; அதன்வழியே உயர்ந்த செயல்களையே செய்ய வேண்டியவன். இந்த நிலையினை எண்ணி ஒவ்வொரு மனிதனும் செயலாற்று வானாயின் நாடு நாடாகும்; உலகம் உயர்ந்தோங்கும். ஆனால் இன்றைய நிலை என்ன? வையம் வாழ, தான் வாழ வேண்டியவன் மனிதன். ஒரு படிமேலே செல்லின், தான் வாடினும் மற்றவரை வாழவிட வேண்டிய்வன். தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க' என்பது சான்றோர் வாக்கு. எனவே, நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை என்ற அடிப்படையில் மனித இனம் வாழின் நாட்டில் நலிவு இல்லை. ஆனால் மனிதன் அந்த நிலையிலிருந்து எங்கோ சென்று கொண்டிருக்கிறான். 'மற்றவர் எக்கேடு கெட்டாலும் கெடட்டும்; தான்மட்டும் வாழ்ந்தால் போதும் என எண்ணுகிறான். அந்த எண்ணத்தில் பல கொடுமைகளைச் செய்கிறான். தனிமனிதன் மட்டுமின்றி, நாடுகளும் சாதி சமயம் இவற்றின் பேரால் சமுதாயமும் இந்தச் சுயநல உணர்வில் மற்றவர்களுக்கு எண்ணற்ற கொடுமைகளை இழைப்பதைக் காண்கிறோம். ஒருலக உணர்ச்சி அரும்ப வேண்டும்’ என்று கூறிக்கொண்டே நாட்டுக்கு நாடுவேறுபாட்டை வளர்ப்பதைக் காண்கிறோம். இப்படியே சமயத்துக்குச் சமயம். சாதிக்குச் சாதி, கட்சிக்குக் 5ーl - - .