உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கல்லவை ஆற்றுமின் கட்சி, மனிதனுக்கு மனிதன் வேறுபாடுகளை விரிவாக்கிக் கொண்டே, வினை விதைத்து, நாட்டையும் உலகையும் அல்லல் படுத்துவதே நாகரிகமாகவுள்ளது. இந்த நிலை யினை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எண்ணிய ஒளவையார், அனைத்துக்கும் அடிப்படை அரசியலும் ஆட்சியு மானபடியால், தமிழக மூவேந்தரையும் ஒருசேர முன்னிறுத்தி, நல்லதொரு அறிவுரையை வழங்குகிறார். ஆம்! மனிதன் மனிதனாக வாழ வேண்டுமானால், மற்றவரை வாழ வைக்கத் தான் வேண்டும் என்பதை வற்புறுத்துகிறார். மற்றவரை வாழவைப்பதில் பிறர்நலம் மட்டுமின்றித் தன்னலமும் உள்ளது என, அத்தன்னலமுடைய மனிதனைத் தெருட்டு கிறார். மற்றவர்களை வாழவைப்பதை 'நல்வினை' என்கிறார். மனிதா நீ வாழும் காலம் இருக்கட்டும்; நீ ஆழும் காலத்தினை நினைத்துப்பார், அப்போது உனக்கு உதவுவார் யார்?' என்று சுட்டி, 'நீ நன்றாக இருக்கும்போது மற்றவரை வாழவிட்டு நீயும் வாழ்வாயாயின், எதிர்பாராது நீ ஆழும் காலத்தில். அந்த மற்றவர் உன்னைத் தாழாமல் தாங்கிக் கொள்வர் என விளக்கி அப்பிறர்நலத்தில் த்ன்னல மும் தோய்ந்துள்ளதைக் காட்டுகிறார். உண்மையிலேயே தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் எதிர்பாராது தாழ்ச்சி உறுவாராயின், சமுதாயம் அவர்தம் தாழ்ச்சியையும் வீழ்ச்சி யையும் வறிதே பார்த்துக் கொண்டிராது, அக்காலத்தில் அவர்களுக்குக் கை கொடுப்பதை இன்றும் நாம் காண் கிறோம். எனவேதான் ஒளவையார் அன்றே என்றும் மனிதன் தாழாது வாழும் நல்வழியினை வீழநேரினும் மற்றவர் அவனை விழாது தாங்கிக் கொள்ளும் நிலையினைச் சுட்டிக் காட்டிச் சென்றார். - சமுதாய வாழ்வுக்கிடையில் தன் வாழ்வினைப் பிணைத் துக் கொண்டுள்ள மனிதன், மற்றவரை வாழவிட்டுத் தானும் வாழ்வானாயின் - தேவையாயின் - கூடுமாயின்- தன்னை