பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங்குடிப் பண்பாடு 127 மரபினர் அம்மைக்கு அஞ்சுகின்றனர். அதனால் இவர்களோ மிகவும் பயந்து, அம்மை வந்தவர் அப்படியே உள்ள இடத்தில் அவரை விட்டுவிட்டு வேறு எங்காவது ஓடிவிடுவர்; பின் திரும்பியும் பார்க்கமாட்டார். அம்மை என்றால் அவ்வளவு அச்சம். மருள் ஆடும் வழக்கம் உண்டு. அதை நல்ல தமிழ்ச் சொல்லாகிய உடம்பு நிரம்புதல்' என்று அழைப்பர். இறைவன் ஒரு மனித உடலில் புகுந்து அதை நிரப்பி மக்களுக்கு அருளை நிரப்புவார் என நம்புவதால் இவ்வாறு அழைக்கின்றனர். ஒருசிலர் தம் குடும்பத்தில் யாரேனும் இறந்தால் அவர்கள், அவர்கள் கடவுளாகிய வீரபத்திரருடன் இரண்டறக்கலப்பார்கள் என நம்புகின்றனர். எனவே அவர் கள் திரும்பி வரமாட்டார்களென்றும் எனவே அவர்களை அழைக்கும் ஆண்டுக்கடன் முதலியன செய்யக் கூடாது எனவும் நம்புகின்றனர். பெரும்பாலான மக்கள் திருமணத் துக்கு முன்பே தாங்கள் வழிபடும் இடம் சென்று இறைவனை வணங்கிவிட்டு வந்தே மணச்சடங்கினை மேற்கொள்ளு கின்றனர். மணத்துக்கு முன் பெற்ற தாய்தந்தையரையும் வழிபட்டே பிற சடங்குகளைத் தொடங்குவர். இவ்வாறு தெய்வத்திடம் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் வாழும் இந்த நாட்டுமக்கள் அந்த நம்பிக்கையால் தங்கள் நோய் முதலியன நீக்கப்பெறுவதாகவும் வாழ்வில் வேண்டுவன பெற்று வாழ்வதாகவும் உறுதியாக நம்பியே செயல்படு கின்றனர். அவர்தம் தெய்வம் பற்றிய நம்பிக்கை அசைக்க முடியாதது. இனி அவர்தம் வாழ்வில் சில பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் காண்போம். பெரும்பாலான பிரிவினர் மணச்சடங்கினைக் கூட்டுவகையிலேயே நடத்துகின்றனர், பத்து அல்லது பன்னிரண்டு மணங்கள்கூட ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் நடப்பது உண்டாம். இதனால் அனைவரும் கலந்து பழக வாய்ப்பு உண்டாவதோடு, செலவும் குறை