பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கல்லவை ஆற்றுமின் கின்றது என்கின்றனர். உண்மையானது தானே! மேலும் அக்கூட்டுமணச் செலவுக்கு உண்மையாகவே பணம்தர இயலாத ஏழைகளுக்குச் செலவிலிருந்து விலக்களித்து, ஒன்றும் பெறாமலேயே மணவினையினைச் செய்து அனுப்புகிறார்கள். அப்படியே பிணச்சடங்குகளும். சிலவிடங்களில் ஒராண்டில் அந்த ஊரில் இறந்தவர் அனைவரையும் எண்ணி, ஆண்டின் கடைசியில் அனைவருக்கும் ஒன்றாகவே இறந்தவர்தம் சடங்குகளை ஒன்றாக ஒரே இடத்தில் செய்கின்றனர். ஒரு சிலவேளையும்.மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைகூட இக்கூட்டு இறப்புச் சடங்கு நடைபெறுவதுண்டாம் இதில்,சிறப்பாக அவர்கள் கொள்ளும் நம்பிக்கை ஒன்றே. மணமாயினும் இழவாயினும் அவ்வீட்டுக்கு உரியவர் தமக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று அனைவருக்கும் சொல்ல வேண்டும். அப்படியே அவர்களும் வேண்டாதவர் என ஒதுக்காது-சடங்குகளில் வந்து கலந்து கொள்ள வேண்டும். சில குழுக்களில் மணச்சடங்குகளில் இல்லையாயினும் மரணச் சடங்குகளில் அனைவரும்-எத்தனை விரோதிகளாயினும்கலந்துகொள்ளவே வேண்டும் என முறை வகுத்துள்ளனர். அதுதான் உண்மைச் சமுதாய வாழ்வு என நம்புகின்றனர். அதனால் அவ்வினத்தவர் தம்முள் பகை இன்றி வாழவழி உண்டாகின்றது; ஒற்றுமையும் உறவும் மலர்கின்றன. இத்தகைய மண முதலிய சடங்குகளைச் செய்வதற்கு வேற்று இனத்தவரையோ அன்றி வேறு யாரையோ அழைப்ப தில்லை. அவரவர் இனத்தில் முதியவர்களே இச்சடங்குகளை முன்னின்று செய்து முடிப்பர். அதில் வழங்கும் மொழியும் அவரவர் மொழியாகவே இருக்கும். எல்லா மணச்சடங்கு களிலும் முதியோருக்கே முதலிடம் உண்டு. அவர்களை நல்ல தமிழ்ச் சொல்லாகிய மூப்பர்’ எனவே அழைக்கின்றனர். அவர்கள் சடங்குச் செயல்களைச் செய்வதனால் அதன் அடிப் படையில் சிலர் கரணத்தார்’ எனவே அழைக்கப் பெறு