பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருங்துமா? 19 மற்றும் இவ்வாறன்றி நேராகப் பொருள் கொள்ளிலும் ஆண்டும் ஒன்று காணலாம். தொல்காப்பியர் செய்யுள் இயலில் சூத்திரத்துக்கு இலக்கணம் கூற நினைத்தார். அவரு டைய கருத்து ஒருவேளை சூத்திரம் நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்குமாறு மிக எளிமையாக இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம். அதனால் அவ்வாறு சூத்திரஞ்செய்தார். ஆனால் மரபியல் சூத்திரம் அத்தகைய தன்று. எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபாகும். எனவே தமிழில் அதுவரை எவ்வாறு சூத்திரஞ் செய்வது மரபு என்பதை எண்ணிப் பார்த்திருப்பார் அவர். எனவே தன் கருத்து தனிப் பட்ட வகையில் எதுவாக அமையினும் மரபு கெடாத வகை யிலன்றோ மரபியல் சூத்திரத்தை அமைக்க வேண்டும். ஆகவே உலக வழக்கு-மரபுநிலை சூத்திரம் இன்னவாறு அமைய வேண்டும் என்பதாகும். அதனாலேயே செய்யுள் இயல் சூத்திரத்தை யாத்தமைப்பதுவே எனத் தன் முடிபாக அறுதி யிட்டுக் கூறிய ஆசிரியர், மரபியல் சூத்திரத்தின் பொறுப் பைத் தன்மேல் கொள்ளாது சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர்' எனப் புலவர் மேல் ஏற்றிக் கூறுகின்றார். மரபு வழி வரும் புலவர் தம் கொள்கை அது எனவும் தனக்கு அது அவ்வளவு உடன்பாடு இல்லை எனவும் குறிப்பாகக் காட்டு கிறார் எனக் கொள்ளலாம். இன்னும் தமக்கு விருப்பமில் லாத கொள்கையைக் கூற வேண்டுமாயின் என்று கூறுவாரும் உளர்’ என அறிஞர்கள் பேசுவதையும் எழுதுவதையும் காண் கிறோம். எனவே இந்த நிலையில் தொல்காப்பியர் எளிமை யுடையதாக வேண்டும் என்ற தன் கொள்கையைச் செய்யுளி யலிலும், மரபு வழி வரும் புலவர் கூறும் நெறியினை மரபி யலிலும் கூறினார் எனக் கொள்ளலாம். என்றாலும் இவ்வாறு இடத்துக்கு ஏற்றவாறு மாறுபவரல்லர் தொல்காப்பியர். இது ஒரு மன அமைதிக்காகவே காட்டியது. ஆகவே மேலே கண்டபடி இர்ண்டு சூத்திரங்களும் ஒன்றற்கொன்று அரண் செய்வனவாகிப் பொருந்தியே நிற்கின்றன என்பதே துணிபு.