உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப் பாட்டு செங்க இலக்கியங்கள் என்று சிறப்பித்துப் பேசப் பெறுவன பத்துப் பாட்டும் எட்டுத் தொகையுமாம். இத்தொகை நூல்களுள் முதற் சங்ககால முதல் கி. பி. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டு, வரையில்கடைச் சங்க காலம் அதை ஒட்டிய காலம் வரையில் அமைந்த பாடல்கள் இடம்பெறும் என்பர். இவை அகம், புறம் இரண்டு பொருள்களைப் பற்றியன. இவற்றுள் நூறு அடி எல்லைக்குள் அடங்கிய பாடல்களை, எட்டுத் தொகை என்றும் நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாடல் களைப் பத்துப் பாட்டு என்றும் பகுத்துள்ளனர். பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்கள் தொகுக்கப் பெற்றமையின் முன்னவை தொகை நூல்களாக அமைய, தனித்து நின்ற பத்துப் பாடல்களைக் கொண்ட இது அதே பெயரில் வழங்கப் பெற்றது. இசையோடு பொருந்திப்பாடும் பாணர், விறலி, பொருநர் போன்றவரை ஆற்றுப்படுத்தும் வகையில் பெரும் பகுதி அமைந்தமையின் இதைப் பாட்டு என்றே தொகைப் படுத்தினார் போலும். இப் பத்துப்பாட்டினால் அக்காலத்தில் வரலாற்றினையே ஓரளவு புரிந்து கொள்ள முடியும். சோழபாண்டியப் பேரரசர் களையும் பிற அரசர்களையும் பெருங்கொடைவள்ளல் களையும் பாடியதுடன் ஆரிய அரசனுக்குத் தமிழ்ப் பண்பாட் டினை அறிவுறுத்திய பாடலும் இதில் இடம் பெறுகிறது. பாடிய புலவர்களோ அக்காலத்து வாழ்ந்த பெரும்புலவர் களாவர். தமிழகத்து நிலை, ஐந்திணை அமைப்பு, அவற்றில் வாழும் மக்கள் நிலை, அகப்பொருள் நுணுக்கங்கள், புறப் பொருளின் பல்வேறு பாகுபாடுகள் இவற்றை அறிந்து கொள் வதோடு, இவற்றால் அக்காலத்திய கலை, தெய்வநெறி, பல வேறு வகைப்பட்ட பிற மக்கள் வாழ்க்கை முறை, பாட் டிசைக்கும் பாணர் போன்றவர் வாழ்க்கை, பெருநகரங்களின்