பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப் பாட்டு 21 சிறப்பியல்பு, போர்க்களங்களின் நிலை, பிறநாட்டவர் தொடர்பு, இயற்கையின் எழில் ஆகிய பலவற்றையும் அறிந்து கொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால் இப்பத்துப்பாட்டு அக்காலத் தமிழகத்தைத் தெளிவாகக் காட்டும் கண்ணாடி எனலாம். மேலும், கடவுளை முன்னிறுத்தி, வாழ்த்தி, வரம் வேண்டும் வகையில் தமிழகத்தில் முதன் முதலாக எழுந்த 'திருமுருகாற்றுப்படை' என்ற பாட்டும் இதில் இடம் பெறு கிறது. எனவே தமிழ் இலக்கிய வரலாற்றில் இப்பத்துப் பாட்டு ஒரு திருப்பு மையமாகத் தெரிகின்றது. . இனி, இப்பத்துப்பாட்டினைத் தனித்தனியாகப் பகுத்துக் காணலாம். அதற்குமுன் இவை யாவை என்பதையும் பாடினோர் பாடப்பட்டோர் யாவர் என்பதையும் அறிந்து கொள்ளலாம் 'முருகு பொருங்ாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து' என்ற ஒரு பழம் பாடல் இப்பத்தினையும் தொகுத்துத் தந்துள்ளது. இவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைட்டுகடாம் என்பன. இவற்றுள் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை என்பன அகத்திணைக் குரியன. மற்றவை ஏழும் புறத்திணைப் பற்றின. முதலாவதாக அமைவது திருமுருகாற்றுப்படை (317) ஆற்றுப்படை என்பது பாணர் கூத்தர் பொருநர் போன்றோர் புரவலர் அல்லது அரசர்களைப் பாடிப் பெரும் பரிசில் பெற்று வரும் வழியில், அப்பெரு நலம் பெறாத தன் இனத்தைச்