பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப் பாட்டு 27 பெறுகின்றன. இதில் அக்காலத்தின் பழக்கவழக்கங்களும் சுட்டப்பெறுகின்றன. சங்கப்பாடல்களுள்-குறிஞ்சி பற்றிய வற்றுள் இது நீண்டதாக உள்ளமையாலும் இதன் பொருட் செறிவாலும் இதனைப் பெருங்குறிஞ்சி' என்றே பேசுவர் புலவர். ஒன்பதாவது உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப் பாலை. (301) இவர் பாடிய பெரும்பாணாற்றுப்படை வழியே காஞ்சியின் சிறப்பு விளங்கிற்று. இதனால் மறைந்த பூம்புகார் (காவிரிப் பூம்பட்டினத்தின்) சிறப்பு விளங்கிற்று. பாடற்குரியோன் கரிகாற்பெருவளத்தான். இவனைப்பாடி பதினாறுலட்சம் பொன் பரிசு பெற்றதாகக் கலிங்கத்துப். பரணி பாடுகிறது (இராச 25). தலைவனைப் பிரிய விரும்பாத தலைவன் 'பூம்புகாரைப் போன்ற பட்டினம் பெறினும் வாரேன்' என்று சொல்லும் வகையில் இப்பாடல் அகப் பொருள் அமைதியில் செல்லுகிறது. இதில் காவிரிப்பூம் பட்டினப் பல்வேறு வகைச் சிறப்புகளைப் பாராட்டுவதோடு சோழன் கரிகாற் பெருவளத்தானின் கொடை, வீரம், பண்பாடு, புகழ் அனைத்தையும் காட்டியுள்ளார் புலவர், "கானம் அவன் வேலினும் வெய்யவாயின (200) என்றும், 'இவள் தோள் அவன் கோலினும் தண்ணியவாயின. (301) என்றும் நெஞ்சுக்குக் கூறும் முகத்தான் இந்த அகப்பாடல் அமைகின்றது. இது வரலாற்றுக்கு உதவும் பான்மையது. பத்தாவது மலைபடுகடாம் (583). இது கூத்தராற்றுப் படை எனவும் பெரும் பரிசு பெற்ற கூத்தன் ஒருவன் பெறாத கூத்தனைச் செங்கண்மா (வடஆர்க்காடு மாவட்டம்) வள்ளல் நன்னன் சேய் நன்னனிடத்து ஆற்றுப்படுத்துவது. இதன் ஆசிரியர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார் பெருங்கவுசி கனார். இவர் மலைப்பகுதியைச் சேர்ந்தவ ராதலின் சேயாறு மலையிடைத்தோன்றி செங்கண்மா எல்லையில் தரையிடை