பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 கல்லவை ஆற்று மின் ஊரும்வரையில் மலையில் உண்டாக்கும் ஒலிகளையும் பிற ஒலிகளையும் விளக்கிக் கூறுவதால் இது 'மலைபடுகடாம்' (கடாம்-ஒலி) எனலாயிற்று. இதில் நன்னன் வணங்கும் நவிரமலைக் காரியுண்டிக் கடவுளின் நிலையும் சேயாற்றின் சிறப்பும் செங்கண்மாநகர் நலனும் நன்னன் கொடைத்திறனும் பிறவும் பேசப் பெறுகின்றன. இசைநலமும் மக்கள் விருந்தி னரைப் புரக்கும் பண்பும், நன்னனைக் காண வருவார் வாயிலில் வரிசை பெறக் காத்து நிற்கும் நிலையும் அவன் அவர்களுக்கும் விறலியர் கூத்தருக்கும் வாரி வழங்கும் வள்ளல் தன்மையும் காட்டப் பெறுகின்றன. இவ்வாறு இப்பத்துப் பாட்டு, சங்க காலத்திலும் அதை ஒட்டிய காலத்திலும் வாழ்ந்த எட்டுப் புலவர்களால் மூன்று பெருமன்னர்கள், இருவள்ளல்கள், குன்றெறிந்த குமரவேள் ஆகியோரையும் அகம் பற்றியும் (இருபாடல்கள்) பாடப் பெற்றவையாம். சங்ககாலத் தமிழகத்தையும் அதை ஒட்டிய கால இயல்புகளையும் கண்டறிய இவை உதவுகின்றன. தமிழ் இலக்கிய வரலாற்றில் பின் மலை, கடல் நாடு, வளநகர், பருவம் ஆகியவற்றை இணைத்துக் காப்பியம் எழக்காரண மாக இவை முதல் திருப்பமாக அமைகின்றன எனலாம். இதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய நல்ல உரை உண்டு. இதை (1889ல்) உலகுக்கு அச்சிட்டுத் தந்த பெருமை டாக்டர் உ.வே. சாமிநாத ஐயருக்கு உரியது. இப்பத்துப்பாட்டு காலத்தை வென்று கதிரவன் ஒளியென விளங்கும் என்பது உறுதி. மணிமேகலை-காப்பிய நயம் தமிழ் இலக்கிய நெடுந்தெருவில் எத்தனையோ திருப்பங். கள் உள்ளன. அவற்றுள் முதன் முத்லாக நம் கண்ணுக்குத் தெரியும் பெருந்திருப்பம் சங்க கால எல்லையில் அமைந்த