பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை-காப்பிய நயம் 29 காப்பிய இலக்கியத் திருப்பமேயாகும். தனித்தனிப் பாடல் களாக அரசரையும் பிறரையும் முன்னிறுத்திப் பாடிய பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் நிற்க, ஒரு தலைவனை முன் ளிைறுத்தி, பலப்பல அடிகளில் பலப்பல காதைகளாகப் பகுத்துப் பெருங்காப்பியம் கண்ட திருப்பமே அதுவாகும். அத்திருப்பத்தில் நமக்கு முதலில் தெரிவன சிலம்பும் மேகலை யுமேயாம். ஐம்பெருங்காப்பியங்களுள் பிற மொழிபெயர்ப்புக் காப்பியங்களாக அமைய, இவை இரண்டு தமிழில் முதல் நூலாகவே அமைந்த பெருமைக்குரியன. முன்னது தாயைப் பாட, பின்னது சேயைப் பாடும் பான்மையினை யாவரும் அறிவர். இவற்றை இரட்டைக் காப்பியம் எனவே அழைப் பரன்றோ! தமிழில் சமய உண்மையினை விளக்கும் அடிப்படையில் அமைந்த பெருங்காப்பியம் மணிமேகலையாகும். சிலம்பில் கவுந்தி அடிகள் தம் சமயமாகிய சமணத்தின் உண்மையினை ஆங்காங்கே சுட்டிக்காட்டுவதோடு, பிற சமயங்களின் ஏற்றத் தையும் பாராட்டுகிறார். ஆனால் சாத்தனாரோ தம் சமய மாகிய பெளத்தத்தின் சிறப்பினைக் காட்டவே இக்காப்பியம் எழுதினாரோ என எண்ணத்தக்க வகையில் இம்மணிமேகலை அமைகின்றது. எனினும், பெளத்தம் வளர்த்த தமிழ் வரிசையில் இம்மணிமேகலை முதலிடம் பெற்று, காப்பிய நயமும் முக்கிய வளமும் பெற்று, பிறசிறப்பியல்புகளும் உற்றுச் சிறந்த காப்பியமாகத் திகழ்கின்றது. அதனாலேயே மேலைநாட்டு அறிஞராகிய டாக்டர் போப் அவர்களும் நம் நாட்டு அறிஞர்களாகிய கனகசபைப்பிள்ளை, கிருஷ்ணசாமி ஐயங்கார், A.S.P. ஐயர் போன்றாரும் பிறரும் இதைப் பொன்னேபோல் போற்றிப் பாராட்டுகின்றனர். அறிஞர்களால் போற்றப்பெறும் அளவிற்கு இக்காப்பியம் சிறப்பதற்கு அதன் இலக்கியவளமே காரணமாகும். காப்பிய இலக்கண அமைதிக்கேற்ப அழகுற அமைந்து, முப்பது காதை