பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைநிலை குப்பம் என்பது கும்பம்' என்பதன் திரிபு என்பர். அதாவது கூடி வாழும் இடம் என்பதாகும். கும்பல், குவியல், கூட்டம் எனக் கொள்ளும் நிலையில் சிலரோ பலரோ கூடி வாழிடங்களைத் தமிழ்நாட்டில் குப்பம் என்ற பெயரால் பண்டைநாள்தொட்டு வழங்கிவருகின்றனர். எத்தனையோ குப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றுள் ஒருசில சிறப்புற்றனவாக, தக்க காரணங்களுடன் தம்முடன் இணை யாகச் சொற்களைக் கொண்டு விளங்குகின்றன. நெய் குப்பம், பள்ளிகுப்பம், நெற்குப்பம், நொச்சிக்குப்பம், நெல்லிக் குப்பம் எனப் பலவகையில் ஊர்கள் உள்ளன. இறைவரொடு சார்த்தி வழங்கப் பெறும் குப்பங்களும் உள்ளன. பொன் னேரிக்கருகில் ஆண்டவனாகிய முருகன் தங்கிய சிற்றுாருக்கு ஆண்டார் குப்பம் என்றே பெயர். அப்படியே முருகன் வள்ளியம்மையாரை ஒருநாள் இருத்திச் சென்று வந்தமை யால் (வள்ளி) அம்மையார் குப்பம் என்ற ஊர் தணிகைவரை அருகிலே அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அம்மையார் குப்பத்தில் இருபெருந்தேவியரும் ஒருபுடை அமர்ந்து காட்சி தந்து கொண்டிருக்கும் கந்தன் திருக் கோயிலுக்கு ஐந்து நிலைக்கோபுரம் அமைத்து. அதற்கும் அதன்வழியே திருக்கோயிலுக்கும் குடமுழுக்குவிழாகும்பாபிடேகம் செய்ய ஏற்பாடு செய்யப் பெற்றுச் செய லாற்றும் அன்பர் அனைவரும் பாராட்டுதலுக்கும் போற்று தற்கும் உரியவராவர். அம்மையார் குப்பத்தும் குன்றுதோறும் தணிகையிலும் பிறயாண்டும் நீக்கமற நின்ற இறைவன்-முருகன் விளை யாட்டின் ஒருபகுதியே இத்தலத்தில் வள்ளியம்மையாரைத் தங்க வைத்தது. அந்த இறைவன் நிலையினைக் கந்தபுராண ஆசிரியர் பலப்பல வகையில் விளக்கிக் காட்டுவதை எண்ணிப் பார்க்க இன்பம் சுரக்கிறது. வளமான வைய வாழ்வையும் மாசற்ற உள நலத்தையும் இந்த உலகில் தந்து, பின் பேரின்ப