பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைநிலை 35 வீட்டிலிசைந்து துயில் கொள்மின் என்று தாலாட்டி அணைக்கும் அந்த அறுமுகன் ஆடலையும் அளவிலா ஆற்றுலுடைமையையும் கச்சியப்பர் பலபடக் காட்டுவர். ஒன்றிரண்டு ஈண்டு கண்டு அமையலாம் என எண்ணுகிறேன். "மாலயன் தனக்கும் ஏனை வானவர்தமக்கும் யார்க்கும் மூலகாரணமாய் கின்றமூர்த்தி இம்மூர்த்தி அன்றே. என்று சுரபதுமனாலேயே போற்றி வணங்கப் பெற்றவனாகிய முருகன், எல்லாவற்றுக்கும் மேலாக-அப்பாற்பட்டவனாகஒருவனாய் உலகேத்த நின்றவனாக இருக்கின்றான் என்பது உண்மை. அவனை அரன்மைந்தனாகக் கண்டு-அரக்கரை அழிப்பவனாகக் கொண்டு-வள்ளி மலையில் வள்ளியை மணந்தவனாக மகிழ்ந்து போற்றுகின்றனர் அடியவர். அப் பெருமான் அருள் ஆடலை யாரே விளக்கவல்லார்? ஆலமர் செல்வன் மகனாக உலகில் புலவர் போற்றும் தணிகாசலத்து இறைவன் தாளிலேயே சத்தவிகார உலகனைத்தும் ஒடுங்கும் என்பர் வள்ளலார். "பித்தப் பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான் தனக்கரிய பிள்ளைப் பெரும்ான் எனப்புலவர் பேசிக்களிக்கும் பெருவாழ்வே மத்தப்பெருமால் நீக்குமொரு மருந்தே எல்லாம் வல்லோனே வஞ்சச் சமணர் வல்லிருளை மாய்க்கும் ஞானமணி விளக்கே அத்தக் கமலத்து அயிற்படைகொள் அரசே மூவர்க் கருள்செய்தே ஆக்கல் அளித்தல் அழித்தலெனும் அம்முத் தொழிலும் தருவோனே சத்த விகார உலகனைத்தும் தாளில் ஒடுக்கும் தனிப் பொருளே! தணிகாசலமாம் தலத் தமர்ந்த சைவமணியே சண்முகனே!