உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் 47 முருகன் அழகனாக இருப்பதோடு, இளையனாகவும் எழுச்சி ஊட்டுபவனாகவும் இனிய மணம் வீசுபவனாகவும் உள்ளான் என அறிதல் வேண்டும். கரிய காடும் வரண்ட பாலையும் வற்றா வளமுடை மருதமும், பரந்த நெய்தலும் சிறக்க இம் மலைகளும் அவற்றின் வளங்களுமே அடிப்படை என்று உணர்ந்ததோடு, அம்மலைகளே மஞ்சு சூழ வானோங்கிப் பிறவற்றோடு அழகுற விளங்குவதை நன்கு கண்ட பண்டைய தமிழ் மக்கள் மலையினை முருகன் தங்கும் இடமாகக் கொண்டனர். இன்றும் முருகன் தங்குமிடம் பெரும்பாலும் மலைகளாகவே உள்ளன. வேங்கடத்து உறையும் இறைவனை, இளையனான முருகனை உணர்த்தும் பாலாஜி' என்ற சொல்லாலே வழங்குவர். முருகன் அல்லது அழகு" என்ற நூலில் இந்த அழகொடு அணைந்த முருகன் சிறப்பினைத் திரு.வி.க. நன்கு விளக்கியுள்ளனர். சிலப்பதிகாரம் குன்றக்குரவை'யிலே முருகனை நன்கு காட்டு கிறார் இளங்கோவடிகள். முருகனைத் தமிழ்க் கடவுள் என்பர்; கலியுகக் கடவுள் என்பர். மிகப் பழைய தமிழ் இலக்கியங்கள் பெயரொடு காட்டப் பெறுகின்ற ஒரே தெய்வம் முருகனேயாம். சக்தியும் சிவனும், திருமாலும் வெவ்வேறு குறியீடுகளால் குறிக்கப்பெறினும், இம்முருகன் பெரும் பெயர் முருக என்று பரிபாடல் காட்டியபடி முருகன்' என்ற பெயரோடே விளங்கு கின்றனன். இறைவனை முன்னிறுத்திப் பாடிப்பரவும் பாடல் களுள் மிகப்பழைமை வாய்ந்த 'திருமுருகாற்றுப்படை'யும் இம்முருகனைப் பற்றியதே. இம்முருகனைப் பற்றிய வரலாறு வடமொழிக் கந்த புராணத்திலும் சங்க காலத்தை ஒட்டிய பரிபாடலிலும் இரு வகையாக உள்ளன. எனினும் இவன் சிவனுக்கும் உமைக்கும் மைந்தனாகவே காட்டப் பெறுகின்றான். தமிழ்நாட்டுத் தனித் தெய்வமாகிய முருகன் முருகேசன்' ஆகிப் பின்