உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நல்லவை ஆற்று மின் வடநாட்டுப் புராண மரபில் காட்டப் பெறும் சுப்பிர மணியனாகி, பின் பிரிக்க முடியா வகையில் ஒன்றிக் காட்சி தருகின்றான். இம்முருகன் சிவன் மைந்தனாக காட்டப் பெறினும், இவன் மும் மூர்த்திகளுக்கு அப்பாற்பட்டு நின்று, அவர்களுக்கும் அருள் செய்பவன் என்பதைக் கந்த புராணத் தின் பிற்பகுதியாகிய உபதேசகாண்டம் நன்கு விளக்குகிறது. கந்த புராணத்திலும் கச்சியப்பர், முருகனின் எதிரியாகிய சூரபதுமன் வாக்கிலேயே, 'கோலமா மஞ்ஞை மீது குலவிய குமரன் தன்னைப் பாலன் என்றிருந்தேன் அன்னான் பரிசிவை உணர்ந்திலேன் யான் மாயவன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும் மூலகாரணமாய் கின்ற மூர்த்தி இம்மூர்த்தி அன்றோ" எனக் காட்டுகின்றார். சில அறிஞர்கள் சிவனாகிய ஐந்து முகமுடைய சங்கரனே ஆறுமுகமுடைய முருகனாக மாறி நின்றார் என்பர். இராமலிங்க வள்ளலார் முருகன் அனைத்தினுக்கும் அப்பாற்பட்ட 'அனாதி' என்ற உண்மையை, "பித்த பெருமான் சிவபெருமான் பெரியபெருமான் தனக்கரிய பிள்ளைப் பெருமான் எனப்புலவர் பேசிக்களிக்கும் பெருவாழ்வே மத்தப் பெருமால் நீக்குமொரு மருங்தே எல்லாம் வல்லோனே வஞ்சச் சமணர் வல்லிருளை மாய்க்கும் ஞான மணி விளக்கே அத்தக்கமலத்து அயிற்படைகொள் அரசே மூவர்க்கருள் - செய்தே ஆக்கல் அளித்தல் அழித்தல் எனும் அம்முத்தொழிலும் தருவோனே சத்த விகார உலகனைத்தும் தாளில் ஒடுக்கும் - தனிப்பொருளே தணிகாசலமாம்தலத்தமர்ந்த சைவ மணியேசண்முகனே!