பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் 49 என்று விளக்குகிறார். அனைத்துக்கும் அப்பாற்பட்ட முருகனை-மும்மூர்த்திகளையும் படைத்து அவர்களுக்கு முத்தொழிலும் தந்து இயக்கும் முருகனை, அதே வேளையில் இளங்குழந்தை ஞான சம்பந்தனாகப் பிறந்து சமயக் காழ்ப்பை நீக்கிய முருகனை-புலவர்கள் சிவன் பெருமான் புதல்வன் எனப் பேசி மகிழ்வர் எனக் காட்டுகிறார். எனவே முருகன் அழகன் என்பதனோடு அனைத்துக்கும் அப்பாற் பட்ட ஒப்பற்ற இறைவன் என்பதும் முந்தையோர் கண்ட (Aւգ-6լ. இனி, இம் முருகன், சிவபெருமான் மகனாகக் கந்த புராணம் காட்டுவதையும் காணல் வேண்டும். மாயையின் மைந்தனாகிய சூரபதுமன் ஆகிய அரக்கன் சிறந்த சிவபக்த னாயினும் தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுமைகள் செய்ய, அவனை அழித்து அருளுமாறு தேவர்கள் சிவனை வேண்டினர். தன் சக்தியன்றி வேறு யாரும் அச்சூரனை அழிக்க முடியாது என்று அவனுக்கு வரம் தந்த சிவன், தன் ஐந்து முகத்தோடு அதோமுகமும் தோற்றி ஆறுமுகங்களி லிருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்கினான். அவை சரவணப் பொய்கையில் படிந்து ஆறுகுழந்தைகளாக, பின் சிவனும் உமையும் சென்று எடுத்துத் தழுவ, ஆறும் ஒன்றாக ஆறுமுகனானான். பின் சக்தியாகிய வேல் கொண்டு தம் தம்பியராகக் கருதப் பெற்ற நவ வீரர்களுடன் தெற்கே சென்று சூரனையும் அவன் உடன்பிறந்தவர்களையும் ஒடுக்கித தேவர் சிறை மீட்டு உலகில் அமைதியை நிலை பெறச் செய்து, தணிகையில் தங்கினான். சினம் தணிந்து தங்கிய தாலேயே தணிகை என்றும் திருத்தணி என்றும் அத்தலம் பெயர்பெற்ற தென்பர். முருகன் திருமால் மருகனும் ஆவன். தம்மை மணக்கத் தவம் செய்திருந்த திருமால் மகளிர் இருவரும் பின் தேவயானை, வள்ளி என அமைய, அவர் களை மணம் செய்து கொண்டு இருபுறம் இருமகளிர் என்றும்