பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வானொலி வழியே!, 'நாலும் இரண்டும்', சிறுவர்களுக்கு', "சான்றோர் வாக்கு' போன்ற நூல்களில் இடம் பெறாத ஒரு சில கட்டுரைகள்-பேச்சுக்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆயினும் பெரும்பாலானவை வெவ்வேறு சமயங்களில் வெவ் வேறு நிலைகளில் எழுதப்பெற்றவை -பேசப்பெற்றவை. எனவே தொடர்ந்த கருத்துக் கோவையினை இதில் எதிர் பார்க்க இயலாது. - - இந்நூலில் சமயம், தமிழ்ப் பண்பாடு ஆயவை பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பெளத்தம் பற்றியும் சைவம் பற்றியும் சில கட்டுரைகள் உள்ளன. தொல்காப்பியர் கருத்தை விளக்கும் ஒரு கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. நாட்டுக் கல்வி பற்றியும் சில கட்டுரைகள் இடம் பெற் றுள்ளன. தனித்த இலக்கியங்களாகிய மணிமேகலை, பெரிய புராணம் போன்றவற்றின் சிறப்பு நலன்களை விளக்கும் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு பல்வேறு தலைப்புகளில் பல்வேறுவகைப்பட்ட, பொருள்களில் இருபத்தைந்து கட்டுரைகள் அமையினும் அனைத்திலும் கோவை நூலாக, நான் முன்னே காட்டியபடி நல்லவை ஆற்றி நலம்பெறுநிலையே கூறப்பெறுகின்றது. பொருள்களின் தலைப்புகளும் விளக்கங்களும் மாறி உள்ளமை போன்றே, எழுதிய காலங்களும் வேறுபாடு உள்ளவையே. பல்வேறு காலங்களில், பல்வேறு அன்பர்கள், மாநாடு, குடமுழுக்கு, பிற விழாக்கள் சார்பாக எழுத வேண்டிய நிலையில் பல்வேறு காலங்களில் கட்டுரைகள் எழுதப் பெற்றுள்ளன. எனினும் உள்ளீடு பெரும்பாலும் ஒத்த முடிவினைச் சார்ந்த நிலையிலே அமைவதைப் பயில் வோர் காண இயலும். - தற்போது நான் முற்றும் என் அன்னையின் பெயரால் அமைந்த வள்ளி அம்மாள் கல்வி அறத்தின் வழியே செயல்