உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்காடு-சக்திவேற்காடே 83 ஊரின் தலபுராணம் இப்ப்ெயரைப் பற்றி என்ன விளக்கம் தருகின்றதென்பதை நானறியேன். ஆயினும் வேற்காடு சக்தியாகிய வேற்காடாகவே உள்ளது என்பதை உணர்கின்றேன். எனினும் தன்னினும் சக்தி வேறல்லள் என்பதை உலகுக்கு உணர்த்தவே பாலாம்பிகை உடனுறை வேதபுரீசர் கருமாரியினையும் அன்பர்களுக்குக் கருணை புரியத் தனியாக விட்டு, அறம் வளர்க்கும் அந்நாயகியின் திறங்கண்டு அருகியே வீற்றிருக் கின்றார். கற்றார் வாழ் காஞ்சியிலே காமாட்சி தனித்து நின்று தண்ணளி சுரப்பதைப் போன்று கருமாரி அருளை வாரி வழங்குகின்றார். எனினும் அருகிலே அண்ணல் உள்ளதை எண்ணி எண்ணி உளமகிழ்வாளன்றோ! பிரிந்தறியாப் பெரு நிலையில் 'சத்தியாய்ச் சிவமாய் ஒளிவிடும் சிறப்பு மிக்க இத் திருத்தலம் இன்று அச்சக்தியின் அருள் நலத்தாலே ஆயிர மாயிரம் மக்களைத் தன்னிடம் வருக என ஈர்த்து, பயன் பெறத் தக்கவகையில் சிறக்கின்றது. கருமாரிதாசர் தவத்திரு இராமதாசர் அவர்களும் அவரொடு இணைந்த நல்லன்பர் களும் இன்று கோயில்களைச் செப்பம் செய்து குடமுழுக்கும் செய்கின்றனர் என்பது சிறந்து போற்றக் கூடிய ஒன்றாகும். கருமாரி பாலஅம்பிகையாகவே தனித்து இருந்து அருளை வாரி வழங்கும் திறத்தினையும் அக்கொடை அளியினையும். சற்றே தூரத்திலே இருந்து உளங்கொளக் கண்டு உவக்கும் வேதபுரீசன் அருள் நோக்கையும் கண்டு களித்துக் கொண்டு போற்றும் அடியவர் குழாம் நாளுக்கு நாள் பெருகி நாட்டுக்கு நலம் செய்யும் என்பது உறுதி. சென்னையிலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள இலட்சக் கணக்கான மக்களைத் தன் அருள் திறத்தால் ஈர்த்துப் புரக்கும் அன்னையையும் அப்பனையும் வணங்குகிறேன். திருப்பணி இயற்றி குட முழுக்கும் செய்யும் நல்லன்பர்கள் தம் தொண்டு சிறக்கவும் தூய உள்ளமும் வாழ்வும் செழிக்கவும் வாழ்த்துகிறேன். - வாழி! நீடுழி