பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் வளர்த்த தமிழ்-பெளத்தம் சமுதாய வாழ்வொடு பொருந்தியது சமயம்; மொழியும் அப்படியே! எனவே சமுதாயம் வளரும் நெறிநின்றே சமயமும் மொழியும் வளர்தல் வேண்டும். அதுவே நியதியும் கூட. உலகம் தோன்றிய நாள்தொட்டு-மனித வாழ்வு மலர்ந்த நாள் முதல்-உலகில் எத்தனை எத்தனையோ சமயங்களும் மொழிகளும் தோன்றின. ஆயினும் சமுதாய வாழ்வு நெறிக்கு மாறுபட்ட பல சமயங்களும் மொழிகளும் கால வெள்ளத்தில் எதிர் நீச்சல் இட்டு, அச்சமுதாயத்தொடு ஒன்றி வளர முடியாமல் மறைந்து விட்டன. அவற்றுள் ஒரு சிலவே இன்றும் வாழ்கின்றன. அவ்வொரு சிலவற்றுள் பெளத்த சமயமும் தமிழ் மொழியும் இங்கே வாழ்கின்றன. தமிழ்ச் சமுதாய வாழ்வில் எத்தனையோ சமயங்கள் இடம் பெற்று நின்றன-நிற்கின்றன. அவற்றுள் ஒன்றே பெளத்தம். ஒரு காலத்தில் தமிழகத்தையே கட்டி ஆண்ட வகையில் சிறக்க வாழ்ந்திருந்த பெளத்தம் இன்று வாழ் விழந்துவிட்டது. எனினும் அதுவிட்டுச் சென்ற அடிச்சுவடு களாகிய, தமிழ் மொழியிலமைந்த, இலக்கிய இலக்கணங் களும் பிறவும் தமிழ் மொழி இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் வாழ்ந்து வீழ்ந்த சமயங்களும் இன்று வாழும் சமயங்களும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டினை ஒத்தே பெளத்தமும் இம் மொழி வளர்ச்சியில் பங்கு கொண்டுள்ளது. அதில் ஒரு பகுதியினைக் காண்பதே இன்றைய என்பணியாகும். பெளத்தம் அசோகர் காலத்திலேயே-கி மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே-தமிழ் நாட்டின் வழியே இலங்கைக்குச் சென்ற அந்தப் பழைய நாளிலேயே-தமிழ் நாட்டிலும் பரவி நின்றதெனினும் அக்காலத்திலெல்லாம் தமிழில் அச்சமயம் பற்றிய இலக்கியங்களோ பிறவோ எழுதப் பெறவில்லை எனலாம். எழுதி மறைந்திருக்கலாம் என்று எண்ண இட