பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் வளர்த்த தமிழ்-பெளத்தம் 85 மில்லை. ஏனெனில், அக்காலத்திலெல்லாம், அவர்கள் தமிழ் மொழியினையோ பிற மொழிகளையோ பற்றுக் கோடாகக் கொள்ளவில்லை என்பது அக்காலத்திய கல்வெட்டுக்களாலும் பிறவற்றாலும் அறிய முடிகின்றது. ஆயினும் சமயம் மக்கள் வாழ்வில் நிலைக்க வேண்டுமானால், அம்மக்கள் மொழி வழியே அதைப் பரப்ப வேண்டும் என்ற உண்மையினை உணர்ந்த பிறகே-கடைச் சங்க காலத்துக்குப் பின்பேபெளத்தர்கள் தமிழில் கருத்திருத்தினர். அதன் அடிப்படை யிலேயே மணிமேகலை’ என்ற பெருங்காப்பியம் உருவா யிற்று. அதற்கு முன்னரோ அக்காலத்தினை ஒட்டியோ ஒரு சில பாடல்களும் சில இலக்கியங்களும் தோன்றியிருக்கக் கூடும். ஆயினும் அவை பற்றித் திட்டமாக நம்மால் ஒன்றும் கூற இயலாது. எனவே பேரிலக்கியமாக இன்று வாழும் சாத்தனாரது மணிமேகலையே தமிழில் உண்டான முதல் பெளத்த இலக்கியம் என்பது உறுதி ஆம்! அந்த இலக்கியம் மொழி வளத்தாலும் இலக்கிய நலத்தாலும் என்றும் வாழும் இலக்கியமாக அமைந்து விட்டது. பெளத்த சமயத் துறவிகள் தமிழகமெங்கணும் விரவி இருந்தார்கள் என்பதும் பல்வேறு பெளத்த சங்கங்களை அமைத்து வாழ்ந்தார்கள் என்பதும் வரலாறு காட்டும் விளக்க மாகும். எனவே அவர்கள் ஆங்காங்கே மக்களோடு தொடர்பு கொண்டு தம் சமய உண்மைகளை விளக்க, சிறு சிறு நூல்கள் தமிழில் எழுதியிருக்கலாம். எனினும் அவை சமுதாயப் பொது நெறிக்கு மாறுபட்ட துறவினை வற்புறுத்தியனவாக அமைந்திருந்த காரணத்தால் காலம் கடந்து வாழவில்லை போலும். சாத்தனாரும் மணிமேகலை யினைத் துறவு நூலாக ஆக்க விழைந்து அதன் வழியே தலை சிறந்தது எனக் காட்ட விழைந்தாராயினும், துறவறத்தினும் இல்லறமே ஏற்றமுடையது என அவர் விளக்க நேர்ந்தமை யானும் சமுதாய அடிப்படைக்குத் தேவையான பிற அற