பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.வே.சு. ஐயர் தமிழ் இலக்கியப்பணி 9 | வேண்டிய ஆக்கப் பணியினை நினைவூட்டிச் சென்றார். ஆம்! அத்தகைய தமிழர் தம் திறமான-திண்ணிய-வாழ்வொடு பொருந்திய-சமுதாயத்தின் அச்சுவேரான தமிழ்ப் புலமையை உலகுக்குக் காட்டி, அதன் வழியே பிறநாட்டோரை வணங்கச் செய்யும் ஒரே வழி, நல்ல புலமையால் விளைந்த இலக்கியங் களை ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் மொழி பெயர்த்து, உலக மக்களுக்கு அளிப்பதேயாகும். இத்தகைய நல்ல திறமான இலக்கியப்பணியினைச் செய்தவர் அப்பாரதியா ரொடு நாட்டு விடுதலைப் போராட்டத்திலும் இலக்கியப் பணியிலும் கலந்து தொண்டாற்றிய திரு. வ.வே.சு. ஐயர் அவர்கள் ஆவார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே அன்னை பாரததேவியின் அடிமைத் தளையை நீக்குவதற்கு நாட்டில் உள்ளார் அனைவரும் சாதி, இன, மொழி, சமய, மண்டல வேறுபாடு ஒன்றும் இன்றி ஒரே உணர்வினராய்ப் பாடு பட்டனர். தமிழகத்திலும் அத்தகைய நிலையில் பல தலைவர்கள் தம் உயிரையும் பொருட்படுத்தாது தியாகத் தீயில் குதித்துப் போராடினர். அத்தகைய நல்லவருள் ஒரு சிலர் நாட்டுக்கு மட்டுமன்றித் தம்தாய் மொழிக்கும் தொண்டு செய்து, அன்னைத் தமிழினை அவனிக்கு அறிமுகப் படுத்தினர். தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாரும் செக்கிழுத்த வ.உ.சிதம்பரனாரும் திரு. வ.வே.சு. ஐயர் அவர் களும் அந்த வரிசையில் முன் நிற்பவராவர். அவருளும் நம் ஐயர் அவர்கள் பணி ஒரு வகையில் உயர்ந்ததாக அமைந்தது. தமிழில் சிறந்த நல்ல இலக்கியங்கள் மிகப் பழங்காலத் தொட்டே வழிவழியாக வளர்ந்து வந்துள்ளன. அவற்றுள் சிறந்ததாகவும் தமிழுக்குக் கதி'யாகவும் இருபெரு நூல் களையே அறிஞர்கள் போற்றுவார்கள். கதி' என்ற அச் சொல்லிலேயே அப்பெரு நூல்களை ஆக்கிய இருபெரும்