பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கல்லவை ஆற்றுமின் மேலும் சிலவிடங்களில் வால்மிகியைக் கம்பன் விஞ்சு வதை ஆங்காங்கே சுட்டிக்கொண்டே செல்கின்றார் ஐயரவர்கள். சீதை தன் கிளிக்கு யார் பெயரை வைக்க வேண்டும் என்று கேட்டபோது, இராமன் கைகேயி'தன் பெயரை வைக்கவேண்டும் என்ற இடமும் இவை போன்ற பிற இடங்களும் சுட்டி, கம்பன் வால்மிகியினும் பாத்திரப் படைப்பில் விஞ்சிய சிறப்பினையும் அதன் வழியே தமிழ் இலக்கியத்தின் ஏற்றத்தினையும் தெளிவுபெற வைக்கிறார். இராமனைப் பற்றிச் சொல்லும் ஓர் இடத்தில் இதை வெளிப்படையாகவே எழுதியுள்ளார். Valmiki has set the stamp on the characters of the Ramayana. But in Kamban’s hand they have become much more grand’ (p, 44) என்பது அவர் வாக்கு. அவருடைய மொழிபெயர்ப்புத் திறனும் ஓரிரு இடங் கண்டு அமையலாம். - . மாரிக்காலம் கழித்து, வருவதாகச் சொன்ன சுக்கிரீவன் வாராநிலையில், இராமன் இலக்குவனை அனுப்பியபோது உள்ள பாடல்கள் பல. அவற்றுள் ஒன்று இது. வெம்பு கண்டகர் விண்புக வேரறுத்து இம்பர் நல்லறம் செய்ய எடுத்த விற் கொம்பும் உண்டு அருங்கூற்றமும் உண்டு உங்கள் அம்பும் உண்டு என்று சொல்லு நம் ஆணையே . (கிட்கிந்தைப் படலம் 4) இதற்கு ஐயர் அவர்கள் செய்த மொழிபெயர்ப்பைக் காண்போம். 'Tell hlm' said Rama that the bow which we have bent to stabish Righteousness and end all evil ones, unbroken yet doth rest in our hands; and let him know that Yama has not yet ceased to work, nor we to hand 'e