உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல சேனாபதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகதூர் தொண்டைமான்

கொங்கு நாட்டில் அங்கங்கே குறுநில மன்னர்

களாக வாழ்ந்த பலர் அவ்வப்போது மன்னர்களுக்கு உறுதுணையாகச் சென்று அவர்கள் செய்த போரில் உதவிசெய்து பகையை ஒழித்து வெற்றிபெறச் செய் திருக்கிருர்கள். அவர்கள் தம்முடைய படைவீரர்களை யும், துணையரசருடைய படை வீரர்களையும் கூட்டிப் போர் செய்வதோடு, தனியே வீரர்களாக வாழ்பவர்களை யும் அழைத்துப் போரில் துணையாகும்படி செய்வார்கள். பழங் காலத்தில் வாழ்ந்திருந்த மலையமான் திருமுடிக்காரி முதலிய வீரர்கள் அவ்வண்ணம் துணையாகச் சென்று மன்னர்களுக்கு உதவி புரிந்தார்கள். -

ஒரு சமயம், சோழ அரசன் ஒருவனுக்கும் தொண்டை நாட்டை ஆண்டு கொண்டிருந்த தொண் டைமானுக்கும் போர் நிகழ்ந்தது. அப்போது தொண் டைமானுடைய படைப் பலத்தைக் கண்ட சோழன், தன் படை அதற்கு எதிர் நில்லாதென்று உணர்ந்தான். ஆகவே, துணைப் படைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்னும் எண்ணம் உண்டாயிற்று. -

அக் காலத்தில், கொங்கு நாட்டில் இருந்த பெரு வீரன் ஒருவன் தன் துணைவர்களாகிய பல வீரரோடு ஒரு பெரும் படையை வைத்திருந்தான். இதை அறிந்த சோழன் ஆள் விட்டு அவ் வீரனைத் தனக்குத் துணை வரும்படி வேண்டினன். அப்படியே அக் கொங்கு நாட்டு வீரன் தன் படையுடன் சென்று சோழனுக்குத் துணையாக நின்று தொண்டைமான வென்றன். இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/23&oldid=583986" இலிருந்து மீள்விக்கப்பட்டது