உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல சேனாபதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு தேர் ஈந்த செல்வன் 43

இதை விடும் செல்வக் குழந்தை எங்கே இருக்கிறது? நீங்கள் இதை விலைக்கு வாங்குவார் யார் என்று தேடிச் செல்ல வேண்டாம். இது தங்கத்தாலும் மணிகளாலும் அமைந்தது. அவை உங்களுக்குப் பயன்படும் ”

புலவர் உணர்ச்சி மிக்கவரானர். அவர் கண்களில் இப்போது ஆனந்தக் கண்ணிர் ததும்பியது. அவர் வாயிலிருந்து பல்லவராயரையும் அவர் மகனையும் பாராட்டும் பாடல்கள் ததும்பி வந்தன. "சுட்டி ஈந்த சோமனையும் மிஞ்சிவிட்டான், தேரை ஈந்த திருவாளன்” என்று தமிழுலகமே போற்றியது.

இந்த அரிய நிகழ்ச்சியைக் கொங்கு மண்டல சதகத்தில் உள்ள பின்வரும் பாட்டுப் புலப்படுத்து கிறது.

சங்கிராம சோழன் மரகதம்

முத்தொடு தங்குஇரதம் சிங்கையிற் பல்லவன் சிறுவனுக்கு

ஈயச் சிறுவன்மனம் புங்கம தாகச் சிறுதேர்

உருட்டிப் புலவனுக்கு மங்களம் மேவக் கொடுத்தஅன் ளுன்கொங்கு மண்டலம்ே. (சங்கிராம சோழன். போர் செய்த சோழன், இரதம்சிறு தேர். சிங்கை-காங்கேயம். பல்லவன்-மும்முடிப் பல்லவராயன். புங்கம்-தூய்மை. . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/52&oldid=584015" இலிருந்து மீள்விக்கப்பட்டது