உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல சேனாபதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியை நாடிய வள்ளல்

"இப்படி அடிக்கடி சிறுத்தைப் புலி மாட்டை அடிப்பதாக இருந்தால், நாம் எல்லாம் இங்கு வாழ்ந்து என்ன பயன்?’ என்ருர் ஒருவர்.

'சிறுத்தைப் புலியா, பெரிய புலியா என்று நிச்சயம் சொல்வதற்கில்லை. சிறுத்தைப் புலியாக இருக்கலாம். என்பது ஊகமே அன்றி, நேரிலே கண்டவர் யாரும் இல்லை' என்ருர் மற்ருெருவர்.

"எந்தப் புலியாக இருந்தாலும் அதை விட்டு வைக்கக் கூடாது; பெரிய புலியாக இருந்தால் இன்று மாட்டைக் கடிப்பது நாளைக்கு மனிதனையும் கடிக்கும். ஆகையால், உடனே அதைக் தொலைக்க வழி தேட வேண்டும்” என்ருர் முன்னே பேசினர்.

ஊருக்குச் சற்றுத் தொலைவில் பெருங் காடு ஒன்று இருந்தது; சிறு குன்றும் இருந்தது. அந்தப் பக்கங் களில் புலி ஒன்று உலவுவதாகச் சொல்லிக்கொண்டார் கள். ஓரிரண்டு மாடுகள், காட்டுக்குள் மேயப் போனவை திரும்பி வரவேயில்லை. புலிதான் அடித்துத் தின்றிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினர். ஆளுல்ை, துணிந்து யாரும் நுழைந்து அந்த காட்டுக்குள் சென்று பார்க்கவில்லை. - கொங்கு நாட் டி ல் கோபிசெட்டிபாளையத்திற்கு அருகில் பாரியூர் என்ற ஊர் இருக்கிறது அந்த ஊர்க் காரர்களுக்குத்தான் புலியைப் பற்றிய அச்சம் உண் டாயிற்று. புலியை ஒழிக்க வேண்டும் என்று யாவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/53&oldid=584016" இலிருந்து மீள்விக்கப்பட்டது