உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல சேனாபதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாண வரி $53

திற்குள் காவிரி ஒடுகிறது. அந்தப் பகுதிகளில்தான் கரை மிகவும் குறைபாடுடையதாக இருந்தது. அங்கே உடைப்பெடுத்துக் கொண்டால் கொங்கு மண்டலப் பகுதியும் சோழ மண்டலப் பகுதியும் ஒரே மணற் காடு ஆகி விடும்.

அந்த இடத்தைச் செப்பஞ் செய்யாவிட்டால் இரண்டு மண்டலங்களுக்கும் ஊறுபாடு நேரும். இதை மக்கள் உணர்ந்தார்கள். முயற்சியும் உடலுரமும் பெற்ற கொங்கு நாட்டு மக்களுக்குத் தங்கள் மண்டி லத்தில் காவிரிக்கரை உடையும்படி விடக்கூடாது என்ற எண்ணம் உண்டாயிற்று. . . . . . . . .

வெள்ளத்தின் நிலையைக் காவிரிக் கரையில் இல் லாத ஊர்களிலுள்ள குடி மக்களும் உணர்ந்து கொண் டார்கள். அங்கங்கே இருந்த கொங்கு நாட்டுத் தலைவர் களும் நாட்டாண்மைக்காரர்களும் தங்கள் ஆட்சிக்குட் பட்ட இடங்களிலுள்ள மக்களை அழைத்து வந்தனர். காவிரிக் கரையில் தழையும் மண்ணும் கல்லும் போட்டு அதை உயர்த்தினர்கள். உடைப்பு எடுக்கும் என்று தோன்றிய இடங்களிலெல்லாம் வைக்கோல்ைக் கொண்டு வந்து போட்டுக் குதிரை மரங்களை நட்டு மண்ணை நிரப்பி அணை போலக் கரையை உறுதிப்படுத்தினர்கள். கொங்கு மண்டலத்தின் கீழ்ப் பகுதி முழுவதுமே இந்தப் பெரிய காரியத்தில் ஈடுபட்டிருந்தது என்று சொல்லலாம். . . . . .

அப்போதுகவிச் சக்கரவர்த்தி கம்பர் கொங்கு நாட் டுப் பகுதிகளில் உள்ள ஊர்களைப் பார்த்துக் கொண்டு வந்தார். அந்த நாட்டில் புலவர்கள் என்று ஒரு பிரிவினர் உள்ளனர். அவர்கள் பரம்பரை பரம்பரை யாகத் தமிழில் புலமை படைத்தவர்கள். கவி பாடும் திறமை உள்ளவர்கள். சிறிய ஊரில் உள்ள தலைவனுக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/62&oldid=584025" இலிருந்து மீள்விக்கப்பட்டது