பக்கம்:நல்ல சேனாபதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நல்ல சேனபதி

இருந்தாலும் அவனைக் கவி பாடிச் சிறப்பித்தார்கள்; சிறிய நூல்களை இயற்றினர்கள். அதனல் கொங்கு நாட்டில் வாழ்ந்த சிறிய வள்ளல்களைப் பற்றிப் பல பல சிறு நூல்கள் எழுந்தன; குறவஞ்சி, காதல், பள்ளு, தூது, கோவை என்னும் பிரபந்தங்கள் பல தோன் றின. ஆயினும் அந்தப் புலவர்கள் வறியவர் களாகவே இருந்தார்கள். நிலையான வருவாய் ஏதும் அவர்களுக்கு இல்லை. யாரேனும் வள்ளலை அவர்கள் பாடினல் அவன் பரிசு அளிப்பான். அதை வைத்துக் கொண்டு எத்தனை நாளைக்கு வாழ முடியும்?

கம்பர் கொங்கு நாட்டில் யாத்திரை செய்து கொண் டிருந்தபோது அங்கங்கே உள்ள வள்ளல்களைக் கண்டார். புலவர் பரம்பரையினரைக் கண்டு அள

வளாவி அவர்கள் நிலையை உணர்ந்து வருந்தினர்.

இவ்வாறு அவர் சென்று கொண்டிருந்த போது தான் திடீரென்று காவிரியில் வெள்ளம் வந்தது. நாடு முழுவதும் அதே பேச்சாக இருந்தது. ஆயிரக்கணக் கான மக்கள் காவிரிக் கரையைக் கட்டச் சென்றிருக் கிருர்கள் என்ற செய்தியைக் கம்பர் கேள்வியுற்ருர். அங்கே போய்ப் பார்க்க வேண்டும் என்று அவருக் குத் தோன்றியது. தம்முடன் வந்த கூட்டத்தோடு போனர்.

அங்கே நடந்து கொண்டிருந்த வேலையையும் மக்க ளுக்கு உள்ள அச்சத்தையும் கண்டார். அவர்கள் ஒன்று பட்டு அந்தப் பெருந் தொண்டைச் செய்வதை அறிந்து வியந்தார். கம்பர் வந்திருக்கிருர் என்று தெரிந்தவுடன் அரசாங்க அதிகாரிகளும் கொங்கு நாட்டுத் தலைவர்களும் அவரை மரியாதையுடன் வரவேற்றனர். - . . . "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/63&oldid=584026" இலிருந்து மீள்விக்கப்பட்டது