உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய பாதி காத்திருந்த கன்னி மயில் பேருந்து நிற்குமிடம் பெண்ணுெருத்தி நிற்கின்ருள் வாருந் தமிழமுதின் வண்ணத்தை யொத்திருந்தாள் பாதை நடப்போரின் பார்வைக் கவளங்கே போதை விருந்தளிப்பாள் போலிருந்தாள்; ஏனெனிலோ கண்ணைக் கவர்கின்ற கட்டழகும் பொட்டழகும் மண்ணில் உதித்த மதிபோல் முகத்தழகும் தேடாமல் பெற்ற திருவழகும் தேர்ந்தெடுத்த ஆடை யழகும் அரும்பு நகையழகும் கண்டவர்கள் கண்ணேப் பெயர்க்காமல் கள்ளமுதம் உண்டவர்கள் போலாம் ஒருதன்மை உண்டாக்கும் பேரழகைப் பெற்றிருந்தாள் பெண்ணழகின் தத்துவங்கள் சேர உருவான செய்ய திருவனையாள்! யாராரோ அங்காந் தவழழகைப் பார்த்திருக்கச் சீராளோ பேருந் தெதிர்நோக்கிக் காத்திருந்தாள் பச்சைப் பயிர்மழையைப் பார்த்துத் தவமிருக்க அச்சப் புயல்வந்தே ஆகா தடித்தாற்போல் எண்ணித் தவமிருக்கும் எண்ணற்ற வண்டிகளே கண்ணில் உருக்காட்டிக் காற்ருய்ப் பறந்தோடும்