உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நாச்சியப்பன் உன்னுகின்ற எண்ணுள்ள உந்துகளே வந்தாலும் தன்னை மதிப்பவரைத் தான்மதியாச் சிற்றினம்போல் நில்லாமல் ஒடி நெடுந்துாரம் போய்ச்சிலரைத் தள்ளாமல் தள்ளிச் சடக்கென்று தான்பறக்கும்! ஒடிப் பறப்பதிலும் ஒட்டுப் பிடிப்பதிலும் கூடி யிருப்பவரில் கொஞ்சம்பேர் வென்றிடுவார். பாழாம் வறுமை பலிகொள்ளக் கண்பிதுங்கி வாழாத கூட்டத்தின் வாட்டங் கருதாமல் வேலை கிடைத்தவர்கள் வீட்டுப் படியென்றும் கூலி யுயர்வென்றும் கூட விடுப்பென்றும் போக்கு வரத்தென்றும் போதாப் படிகேட்டும் நாக்கு வளைத்து நடந்து முழக்கமிட்டுப் போராடிப் போராடிப் பொற்கோ புரங்காண வேரோ டழிந்துவரும் வேருேர் இனந்தன்னைச் சற்றுங் கருதாமற் சாதனைகள் செய்வதுபோல் முற்றும் வலுவோடு முன்னேறிப் பேருந்தைப் பற்றிப் பிடித்தேறிப் பாங்காக வென்றவர்கள் சற்றேனும் பின்னல் சபிப்பாரை எண்ணுமல் தம்வேலை நோக்கித் தமது நலமொன்றே இம்மா நிலத்தினிலே எண்ணிச் செயல்படுவார். ஏறி விழுந்த இளைஞன் அந்த அழகுடையாள் ஆவல் வெறுப்பாகி நொந்து மனம்புழுங்கும் நோய்பெற்ற வேளையிலே வந்தங்கு நின்றதொரு வண்டி தனிலேறிச் சிந்தை நிறைவுதனைச் சேருங்கால் ஆவலுடன்