உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 29 ஓடிவந்தோர் ஆடவனும் ஒற்றை யடிவைத்துக் கூடி மகளிரெல்லாம் கொல்லென்று தாம்சிரிக்க வண்டிக்குள் வீழ்ந்தெழுந்தான்; வண்டி நடத்துபவன் கண்டு நிறுத்திக் கலகலெனத் தானகைத்துச் சேலகட்டிக் கொண்டுவந்தால் சீட்டுக் கொடுத்திடுவேன் கோலக் குழாய்ப்பெண்ணே கொஞ்சம் இறங்கென்ருன் மீசை முகங்கிறங்க மேவும் அசட்டைப்போல் ஆசையுடன் பாய்ந்த அழகன் இறங்கிவிட்டான். பாவம்! எனச்சொல்லிப் பரிதாப மாய்நோக்கி ஆவல் அழிந்தே அவனிறங்கும் காட்சிகண்டு சிந்தைத் துயரோடு நோக்கும் சேயிழையை அந்த இளைஞன் அகல விழித்தபடி பார்த்து மகளிர் வண்டி பாராமல் ஏறியதால் வேர்த்து விறுவிறுத்து வேறுவண்டி தேடிநின்ருன். மறுநாளும் அங்கே மணிக்கொடியாள் வந்தாள் குறுகுறுக்கும் கண்கள் குடைந்து குடைந்தவளைத் தாக்குகின்ற காட்சி தனையவளும் பாராமல் நோக்குகின்ருள் பேருந் தெதிர்நோக்கிக் காத்திருந்தாள்; வந்துவந்து செல்லுகின்ற வண்ணப்பே ருந்துகளில் சிந்தை செலுத்தித் திசைபார்த்துக் காத்திருக்கும் அந்தப்பெண் ஏதோ அருகில் குரல்கேட்டு விந்தை விழிகாட்டி விரைந்து முகந்திருப்பி நோக்க முதல்நாள் நுழைந்து மகளிரெலாம் ஆர்த்துச் சிரிக்க அசடாகி நின்றவனே தன்னருகில் நின்று தயக்கத்தை விட்டொழித்தே நன்றி எனக்கூறும் நயமிக்க சொற்கேட்டாள் :நேற்றெனக் காதரவாய் நீயொருத்தி யில்லையெனில் தோற்று மனங்குலைந்து சோர்ந்திருப்பேன்’ என்றுசொல்லிப்