உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நாச்சியப்பன் பேச்சுக் கொடுத்தான், பிழையின்றி அன்னவளும் கூச்சந் தவிர்த்துக் குழைவாகப் பேசிநின்ருள். வாடிக்கைப் பேச்சு நாடோறும் பேருந்து நிற்குமிடம் நாடிவந்து வாடிக்கை யாகஉரை யாடல் நடத்திவந்தான் பார்வை தொடக்கிவைத்த பாசம் உரையாடல் நீரால் வளர்ந்து நெடும்பயிராய் முற்றி உளங்கலக்குங் காதல் உருவெடுத்து நாளும் வளம்பெற் றுயர்ந்து வளர்ந்து செழித்ததுவாம்! பேருந்து நிற்குமிடம் தோன்றிப் பிறந்துபச்சை நீருந்து வங்கக் கடற்கரையில் நீடித்துப் பூஞ்சோலைப் பாங்கில் பொலிந்து திரைப்படத்தில் வாஞ்சை வளர்த்துவந்த தவ்வன்பே. நாளைக்கு மாமல்லே நாம்போவோம் என்றந்தக் காளை உரைத்தபடி கன்னி மயில் நடந்தாள் பேருந்துச் சந்திப்பில் பேசற் கினியான நேரில் உடன்சேரும் நெஞ்சக் கருத்தோடு போய்க்கொண் டிருக்கும் பொழுதில் உடன்பயிலும் தூய மனங்கலந்த தோழி ஒருத்திவந்தாள். என்ன அவசரமோ ன்ங்கேநீ போகின்ருய் இன்னும் பொழுதுண் டி.தற்கிடையில் என்வீட்டில் தேநீர் அருந்திப்பின் சென்றிடலாம் அன்புடையாய் வாந் எனவழைத்த வாஞ்சையினை மீருது அவள் இல்லம் சென்றங்கே அன்பாகப் பேசித் துவளும் இடையுடையாள் சொல்லாடிக் கொண்டிருந்தாள்.