உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 பாடல்கள் வீட்டுக் சுவரில் விருந்தளிக்கும் காட்சியென நீட்டிக்கொண் டுள்ள நிழற்படங்கள் கண்டவளும் வேட்கை யுடன்எழுந்து பார்த்தாள்! வியப்புற்ருள்; ஆட்கொண்ட காதலனும் அங்குப் படவுருவாய் வீற்றிருக்கக் கண்டாள்; விழித்தாள் திகைப்புற்ருள். ஆற்றல் தனக்கூட்டி அன்புரிமைத் தோழிதனை யாரோ இவரென் றறியாளாய்க் கேட்கத்தே நீரோடு வந்தாள் நிழற்படத்தைப் பார்த்துவிட்டு அக்காள் கணவர் அரசு செயலகத்தில் தக்க பணியாற்றுந் தலைமைக் கணக்கரென்ருள். காதலித்தான் குடும்பம் தொட்டிலிலே அப்போது தூக்கங் கலைந்தெழுந்த பட்டுடற் செல்வத்தைப் பாங்காகத் துரக்கிவந்தே அக்காள் குழந்தை; அவரைப்போல் உள்ளதன்ருே பொக்கைச் சிரிப்பைப்பார்! பொல்லாக் குறும்பனடி! இந்தப் பயலுக்கோ என்னை மிகப்பிடிக்கும் சொந்தம் இவனுக்கு நான்தான் அதிகமென்ருள். பூவில் உறைதிருவைப் போலிருந்த பெண்ணுெருத்தி கோவில் பழந்தேங்காய்க் கூடை யுடன்வந்தாள் அக்காளும் வந்துவிட்டாள் ஆஆ எனக்குதித்தே அக்கா இவளென் அருமைமிகு தோழியென்முள் என்ன கவலையம்மா? ஏணிப் படியுள்ளாய்? உன்னை வருத்துவதென் னேவென்று கேட்டக்காள் அன்போ டருகி அவள் தலையைக் கோதிவிடச் சின்ன மயிலனையாள் சிந்தை குழம்பியதால்