உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 33 வீழ்ச்சி யடையாதோ வீணர் புரிகின்ற சூழ்ச்சி பலித்தால் துயரம் மலியாதோ? நல்ல செயல்புரிவார் நாடாளக் கேடுசெயும் புல்லர் நினைப்பெல்லாம் போட்டதிட் டம்போலே வெற்றி பெறுமென்ருல் நீதி விழிபிதுங்கிப் பற்றி யெரியாதோ, பாரில் அறச்செயல்கள் முற்றும் அழியாதோ, மூடர் வெறுந்தலேபோல் வெற்றுச் சுடுகாடே விஞ்சிக் கிடக்காதோ? கள்ளம் கவடற்ற கன்னி மயிலாளே உள்ளங் கவர்ந்தந்த உன்ம வெறிபிடித்தான் மானங் கெடுப்பதற்கு மாதக் கணக்காகத் தானிட்ட திட்டம் தடைபட்டுப் போனதஞல் நெஞ்சு குலைந்து நினைப்பு வெறுப்பாகி வஞ்சமுடை யாய்ை வழிதிரும்பும் போதினிலே வண்ண உந்து வண்டியொன்று வந்துநிற்கக் கண்டிருந்தான் எண்ணித் தவமிருந்த இன்பவல்லி தானிறங்க ஆவல் அடியெடுத்தே அத்திசையில் சென்றவனும் பூவிழியைத் தாக்கியொளி போக்கியதோர் மின்னலென உள்ளஞ் சிதைக்கும் ஒருநிகழ்ச்சி கண்டானே! கன்னி யிவளுக்குக் காதலரும் ஆயிரமோ என்னை வரச்சொன்னுள் ஏங்கி யிருக்கின்றேன் இன்ளுெருவ ைேடிங் கிறங்கி நடக்கின்ருள். என்ன துணிச்சல் இளம்பெண்கள் இப்படியே தன்னிச்சை யாய்நடந்தால் தாங்குமோ இவ்வுலகம் ? ஆடவர்போல் பெண்டிர்க்கும் ஆளுரிமை வேண்டுமெனப் பாடுங் கவிஞர்களும் பாராள வந்தவரும் வேண்டும் உரிமை வழங்கி விடுவதனுல் தூண்டும் இழிநெறியாம் துன்பம் உணராமல் 3