உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நாச்சியப்பன் பாடுகின்ருர் பேசுகின்ருர் பாரைக் கெடுக்கின்ருர் கேடு வளர்க்குமிந்தக் கேடிகளின் போக்கைத் தடுக்காமல் விட்டுவிட்டால் தருமம் குலேயும் ஒடுக்காமல் விட்டுவிட்டால் உண்மை தலைகுனியும் இப்போதே நான்தொடர்வேன்; ஏசிப் பழித்திடுவேன் தப்பாது அவள்நெஞ்சில் தைக்கும் மொழிகளினல் குத்தித் துளைத்துவெட்கங் கொண்டோடச் செய்திடுவேன் மத்துக் கடைவின்றேல் வெண்ணெயில்லை; மற்றிங்குக் கண்டிப்பார் இன்ருகில் கற்புநெறி யின்ருகும் தண்டிப்பார் இன்றேல் தழைத்துவிடும் குற்றமெலாம்! வண்ண முகத்தாளும் வந்தபுத் தாடவனும் உண்ணுங் கடையொன்றில் உள்துழையக் கண்டு தொடர்ந்துசென்ருன் காத்திருந்தோன் தோகை எதிரில் இடத்தேடிப் போயமர்ந்தான், எண்ணக் குமுறலையே சொல்லின் வெடியாக்கித் துப்பாக்கி வேட்டைப்போல் கொல்லும் மொழியால் கொதித்துப் புலம்பிநின்ருன். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் பெண்ணென்ற தோற்றத்துப் பேயுருவே உன்னதான் எண்ணத்தில் தெய்வமாய் ஏற்றுப் பெருமையுடன் போற்றி யிருந்ததெலாம் பொய்யாக்கி விட்டாயே தூற்று மொழியேற்கத் துணிவேற்று விட்டாயே, செந்தமிழர் நாட்டுதித்த சேயிழைக்கு மானந்தான் சொந்தச்சொத் தாகுமெனச் சொன்ன பெரியோரின் பொன்மொழியைக் குப்பையிலே போட்டொதுக்கி விட்டாயே சின்னத் தனத்தின் சின்னம்நீ தானென்று