பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- * ե 1.JVT L–6) 3; Gf. காட்டிவிட் டாயே கடல்போன்ற நம்பிக்கை ஒட்டிவிட் டாயே உயிருக் குயிராக நேசித்தாய் என்றிருந்த நெஞ்சைக் கரியாலே பூசி யழித்துப் புதுவாழ்வைத் தேடிவிட்டாய் காதல் நிலையென்று கம்பன் முதலானேர் ஒதிமுடித்ததெல்லாம் ஊதிப் பறக்கவிட்டு நேரத்துக் கொன்ருய் நினைப்புத் தடுமாறி வாரத்துக் கொன்ருய் வருவாரைச் சந்தித்துக் காதல் நடத்துகின்ருய் காதல் இதுவாமோ மாதென்றே யுன்னை மதித்து வருவோர்க்குப் பித்தம் பிடித்தறிவு பேதலிக்கச் செய்கின்ருய் மொத்தத்தில் நீயோர் முழுமோசக் காரியென்முன் ஆத்திரத்தால் கொப்புளித்தான் அத்தனையுங் கேட்டந்தப் பூத்த முகமுடையாள் புன்சிரிப்புக் கொண்டவளாய் ‘அண்ணு எனவிளித்தாள்; அன்னேன் இடிந்துவிட்டான் கண்ணு வெனக்கூறிக் காதல் மொழிபேசி அத்தான்என் அத்தானென் ருயிரங்காற் கூறியவள் பொத்தானே மாற்றுவது போலிங்கே அண்ணன் உறவுக்கு வந்தாளென் றுள்ளம் புழுங்கிச் சிறகு படபடக்கச் சிட்டுத் துடிப்பதுபோல் நெஞ்சு துடித்தான்.அந் நேரிழையாள் பேசுகின்ருள் கொஞ்சம் பொறுமையுடன் கூறுவதைக் கேளுங்கள். பெண்ணுரிமை பேசவந்த பெருந்தேவி பேதைமட மாது பிறிதோர் ஆடவனைக் காதலிப்பதுங்கள் கருத்தில் இழிசெயலாய்த்