உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 37 மாற்ருர்மேற் குற்றஞ் சுமத்தும் வழக்கத்தைப் போற்ரு திருந்தால் புவியே திருந்திவிடும். உங்கள் மனைவி உயிர்போல் நினைத்திருக்க இங்கென்னே நீங்கள் எதிர்பார்த்தல் குற்றமன்ருே? என்றும் உங்கள் வாழ்வில் இனியஒரு பாதியென நின்று நலம்பகிர்ந்து நீண்ட துணையாக வாழும் ஒருத்திக்கு வஞ்சம் இழைத்துவிட்டு வாழத் துடிக்கின்ற என்னை வரவழைத்தென் கற்பைக் கெடுப்பதற்குக் கன்னெஞ்சம் கொண்டீரே அற்பப் புழுப்போல ஆடவர்கள் பெண்ணினத்தை எண்ணும் நிலையோனல் எல்லார்க்கும் நல்வாழ்வு நண்ணும் எனச்சொன் ஞள்; நாணம் சிறிதுமிலான் காய்ந்துவரும் புண்ணின்தோல் கையால் உரித்தெடுக்கும் ஆய்ந்துணராப் பையன்போல் ஆருத புண்ணுக்கி இன்று புதிதாய் இவனே நீ காதலித்தாய்; என்னைப் புறந்தள்ள ஏதேதோ சொல்லுகின்ருய் என்று சினங்கூட்டி அந்த இளைஞன்மேல் சென்றுமலைந் தான் அணிந்த சேட்டுத் தலைப்பாகை போயோர் புறம்வீழப் பொற்கொடிபோல் கூந்தலுடன் மாய இளைஞனொரு மங்கையாய் மாற்றமுறச் சோதித் திருவனையாள் தூய உயர் இனிய பாதி எனவாழ்வில் பங்குகொண்ட தன் மனைவி காதலிக்குக் காதலனுய்க் காட்சிதந்த நாடகத்தை ஒதா துணர்ந்தவனுய் உள்ளத்தில் கூச்சமுற்றுப் பேதை விழிப்பதுப்ோல் பேந்த விழிவிழித்து வேதனையோ டேகும் விரைந்து. -