பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பின் பரிசு காசியிலே, கங்கைக் கரைதனிலே! பொங்கி நுரைததும்பிப் புன்னகைசேர் மங்கையைப்போல் கங்கையெனும் தெய்வமகள் காசி நகர்கடந்து செல்லும் வழிதனிலே சிற்றுார்க் கரை தனிலே கொல்லென் சிரிப்பும் குதுரகலமாம் பேச்சொலியும் காதைத் துளைத்துக் கவிவெள்ளம் பாய்ச்சியவாம் போதை தலைக்கேற்றிப் புத்துணர்வை யூட்டியவாம் ஆமாம் பதின்மர் அழகு மயிலினங்கள் பூமாது பெற்றெடுத்த புத்தழகு மொத்தமுமே சேர வெழுந்த திருவனையார், செவ்வாயின் ஈரம் அழுந்தும் எழிலுதடு தாமசையும் போதெல்லாம் இன்னிசையும் பொற்சலங்கை தன்னிசையும் காதில் விழுந்து களிப்பில் இசைத்திடுமாம்! தங்க உடல்நிறமும் தாமரைப்பூச் செம்முகமும் அங்கொருகால் கண்டார் அவாக்கொண்டு பேதலிப்பார்! மின்னும் இடையழகும் மேவும் நடையழகும் கன்ன மலரழகும் கண்டார் விழிதிருப்பார்! செம்பவழ வாயுதடும் சேயின் விழியழகும் கொம்பணையும் பூங்கொடிபோல் கொண்ட உடலழகும்