பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 கண்டால் கவிபிறக்கும் கள்ளின் வெறியூட்டும் வண்டுவிழி மங்கையர்கள் யாரென்ருல் புண்ணியஞ்சேர் காசித் திருநகரின் கண் வதிந்த மக்களிலே பூசித் திடவாழ்ந்த பூசுரராம் மேற்குலத்தார் தம்மினத்துப் பெண்மக்கள்; தங்க நிறமுடையார் விம்மித் திரியும் பருவத்தார்; வாழ்க்கையெனும் வையத் தடியெடுத்து வைக்காத வண்ணங்கள்; கொய்யாக் கனிகள்; குறும்பு விளையாட்டார் எது துன்பம் தொல்லே எதுகவலே தீமை எதுவென் றறியா இயல்புடைய பெண்குலத்தார்; தோன்றியநாள் தொட்டுத் துவளாமல் முன்னெடுத்தே ஊன்றியதாள் பின்வாங்கா தோடியவா றுள்ளநதி கங்கையிலே நீராடிக் காற்றில் அனலேந்தி எங்கெங்கும் வெப்பத்தை ஏற்றும் கதிரவனின் பொல்லாக் கொடுமைதனைப் போக்கிக் குளிர்நலத்தை எல்லா வகையும் இனிதே அனுபவித்தார். கன்னிப் பெண்களின் குறும்பு விளையாட்டு பின்னுக் கிழுத்தொருத்தி சாய்த்திடுவாள்; பேதலித்தே என்ன நடந்ததெனும் எண்ணமின்றிப் பேந்த விழித்து முழுகியவள், மீண்டும் அவளைப் பழித்தெழுவாள்; நீருக்குள் பாய்ந்து கயல்போலே அங்கொருத்தி காலேக் கடிப்பாள்; அணங்கொருத்தி பொங்கிப் புரண்டுவரும் நீரில் புறமுதுகு தோய மிதந்திடுவாள்; தோகை யொருத்திதிரு வாயால் மறையோதி வைதிகரைப் போல்நடிப்பாள்: